மேலும் அறிய
திருப்பரங்குன்றம் விவகாரம்: தி.மு.க., அரசு அரசியலமைப்பு சட்டத்தை மிதிப்பதாக எல்.முருகன் குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். - எல்.முருகன் பேட்டி.

எல்.முருகன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியமைப்புச் சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்.
பூர்ண சந்திரன் இல்லத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மதுரை நரிமேடு பகுதியில் அமைந்துள்ள பூர்ண சந்திரன் இல்லத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகை தந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். உடன் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன் கூறுகையில்...,” "திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதனை தர்மத்தின் வழியில் தான் போராட வேண்டும். பூர்ண சந்திரன் இதற்காக உயிர்த்தியாகம் செய்துள்ளார். அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. அவரது தியாகம் என்றைக்கும் மறக்கப்படாது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றனர். முருக பக்தர் என்ற அடிப்படையில் பூர்ண சந்திரன் மனமுடைந்து இந்த முடிவை எடுத்து உள்ளார். மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதே பூரண சந்திரனுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும். கடவுள்வழிபடுவது என்பது இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் தந்துள்ள உரிமை. ஆனால் திமுக அரசு அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















