மேலும் அறிய

M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்

M R Vijayabhaskar's statement : தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன். இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுகவில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்- விலகிய எம்எல்ஏக்கள்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி காரணமாக அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விலகி வருகிறார்கள். அந்த வகையில், கரூர் எம்எல்ஏ பதவியில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்தும் விலகியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் லட்சியப் பாதையிலும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான்.

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.?

பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல; இரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். அம்மா அவர்களின் மறைவுக்குப் பின். இந்த இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் நாம் சந்தித்தது அரசியல் மட்டும் அல்ல: அப்பட்டமான அதிகார அடக்குமுறையும், நம் தொண்டர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட துயரங்களும் தான். அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. என் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகள் மற்றும் என் குடும்பத்தினர்கள் மீதும் 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டது. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது. அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி,

செந்தில் பாலாஜியின் அதிகார பலம்

செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும். கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணைநின்ற கழக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும்,

ஆனால். இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத. அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. புரட்சித் தலைவரும். புரட்சித் தலைவி அம்மாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம். நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா?

திமுக- அதிமுக கூட்டணி

தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன். இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்? அண்ணன் எடப்பாடியார் அவர்களே... நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர. உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம்.

ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாகக் மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை.

கண்ணீருடன் விடைபெறுகிறேன்

என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும் என எம்.ஆர். விஜயபாஸ்கர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget