TVK Bussy Anand: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நெருங்கிய காவல்துறை? இன்றைக்குள் கைதா?
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தங்கியிருக்கும் இடம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் இன்றைக்குள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தங்கியிருக்கும் இடம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. இவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்குள் கைது செய்யப்படாலாம் என்றும் கூறப்படுகிறது.
கரூர் துயர சம்பவம்:
தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரச்சார திட்டத்தை அண்மையில் அறிவித்தார். அதன்படி, திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சார பயணத்தை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இது தமிழ் நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேற்று விளக்கம் அளித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
ஆனந்த் இருக்கும் இடத்தை நெருங்கிய போலீஸ்?
இச்சூழலில் தான் கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் , மற்றும் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது தமிழ் நாடு காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் மதியழகன் மற்றும் பவுன் ராஜ் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இதனிடையே இருவர் சார்பில் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டிருக்கிறது. விடுமுறை நாட்கள் என்பதால் இந்த மனு தொடர்பான விசாரணை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. இதனிடையே ஒரு முக்கியமானா தகவல் வெளியாகியுள்ளது. அதாவது என்.ஆனந்த்ஏற்காட்டில் தலைமறைவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் அவர் கைது செய்யபபடலாம் என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.





















