Karur Stampede: கரூர் சம்பவம் எதிரொலி..முக்கிய முடிவு எடுத்த விஜய்? என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

TVK Vijay: கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில் தான் தவெக சார்போல் எந்த ஒரு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் துயர சம்பவம்:
தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரச்சார திட்டத்தை அண்மையில் அறிவித்தார். அதன்படி, திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சார பயணத்தை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இது தமிழ் நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது வரை தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு சரி கடந்த மூன்று நாட்களாக விஜய் அமைதியாக இருக்கிறார்.
எந்த நிகழ்ச்சியும் வேண்டாம்:
இந்த நிலையில் தான் தவெக தலைமை சார்பில் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தவெக சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்த கூடது என்று தலைமை சார்பில் நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், எந்த ஒரு நிகழ்சிகளுக்கும் தற்போதைய சூழலில் அனுமதி கேட்க வேண்டாம் என்றும் தவெக தலைமை அறிவுறித்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.






















