Annamalai: ”தயவு செய்து அத மட்டும் பண்ணாதீங்க” - விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை!
Annamalai : கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக விஜய்க்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

Annamalai : கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக விஜய்க்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
கரூரில் நேற்று நடந்த தவெக பரப்புரையில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 50 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனுமதி கொடுக்காதீங்க:
இந்த துயர சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூர் சம்பவத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று இருக்கிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் மேனேஜ்மெண்ட்டே தவறாக இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஏர்ஷோவில் 5 பேர் இறந்து போனார்கள். சரியான இடத்தை கொடுங்கள். அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் அனுமது கொடுக்காதீங்க.
ஆம்புலனஸ் செல்ல முடியாத சந்து:
கூட்டம் வரும் என்று தெரிந்தும் ஏன் சரியான முன்னேற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. இவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரிந்தும் குறைந்த அளவில் காவல்துறை போடப்பட்டது ஏன்? ஆம்புலன்ஸ் செல்ல முடியாத ஒரு சந்து தான் அது. பொது இடத்தில் அனுமதி கொடுப்பதற்கு முன் காவல்துறை நூறு முறை யோசிக்க வேண்டும். உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அவ்வளவு சொல்கிறது. பொது சொத்துக்களை சேதபடுத்தக்கூடாது, ஆம்புலன் சென்று வருவதற்கு சரியான இடம் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு உடனடியாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் மற்ற அதிகாரிகளுக்கு அது எச்சரிக்கையாக இருக்கும். ஆளுங்கட்சி பர்மிசன் கொடுக்க கூடாது என்று ஆயிரம் சொல்வார்கள் ஆனால் காவல்துறை அப்படி இருக்கக்கூடாது.
யோசிக்க வேண்டும் விஜய்:
எங்கள் மாநிலதலைவர் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அது சரிதான். ஒரு நபர் ஆணையர் விசாரிப்பதும் சரி தான். சிபிஐ இதை விசாரிக்க வேண்டும். எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க கூடாது. தன் தலைவனை பார்க்க வருபவன் யாராவது செருப்பை வீசுவானா? ஏன் மின்சாரம் கட்டானது என்பதையும் விசாரிக்க வேண்டும். விஜய் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது.
மொத்த கரூர் மாவட்டத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாய்ண்ட் தான் இருக்கிறது. மற்றக்கட்சிகள் எல்லாம் ஒரு சட்டமன்றத்திற்கு ஒரு பாய்ண்ட் வைக்கிறார்கள்.
ஒரு மாவட்டத்திற்கு ஐந்து இடங்களில் மக்களை சந்திக்கிறார்கள். ஒரே பாய்ண்டில் சந்தித்தால் 20 ஆயிரம் பேர் வரமால் என்ன செய்வார்கள். அதுவும் வார இறுதியில் வைக்கிறார்கள். வார நாட்களாக இருந்தால் குழந்தைகளை அழைத்து வர மாட்டார்கள். அதனால் விஜய் இதையெல்லாம் யோசிக்க வேண்டும். எந்த தலைவரும் தனது கூட்டத்திற்கு வருபவர்கள் செத்துபோக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். விஜய்க்கும் நிச்சயம் அப்படி ஒரு மனப்பான்மை இருக்காது”என்று கூறியுள்ளார்.






















