மேலும் அறிய
Advertisement
பதவி விலக சொல்லி டார்ச்சர் செய்தால், தற்கொலை செய்து கொள்வேன் - திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் பேட்டி
’’விசிகவினர், பாமகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் தனியாக போட்டியிட்டேன். இது தலைமைக்கு தெரியாது’’
தருமபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் திமுகவினர் 8 வேட்பாளர்களும், பாமக 3 வேட்பாளர்களும் விசிக வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பொ.மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு திமுக தலைமை ஒதுக்கி அறிவித்தது. ஆனால் 13வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி புஷ்பராஜ், திமுக தலைமை அறிவிப்பை ஏற்காமல், கூட்டணி வேட்பாளரை எதிர்த்து, கடந்த 4ஆம் தேதி தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பு மூலம், 8 திமுக உறுப்பினர்களின் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 4 வது பொது வார்டு கவுன்சிலர் சின்னவேடி தலைமையில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திமுக தலைமை அறிவித்தது போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு பேரூராட்சி தலைவர் பதவியை தர வேண்டும் என விசிகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே போல் திமுக தலைவர் கட்டளையை மீறக் கூடாது என திமுக தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் சாந்திபுஷ்பராஜியிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் புஷ்பராஜ் பதவி விலக மறுத்து வருகிறார். ஆனால் திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட, ஒன்றிய, நகர திமுக பொறுப்பாள்ரகள் டார்ச்சர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட் சாந்தியின் கணவர் புஷ்பராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தான் திமுகவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். முன்னாள் பேரூராட்சி தலைவர், தற்போது திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த பேரூராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விசிகவினர், பாமகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் தனியாக போட்டியிட்டேன். இது தலைமைக்கு தெரியாது. பொ.மல்லாபுரம் பேரூராட்சி கூட்டணிக்கட்சியான விசிகவிற்கு ஒதுக்கியதால், என்னை பதவி விலக வேண்டும் என திமுக தலைமை டார்ச்சர் கொடுத்து வருகிறது. எனக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதால், நான் தற்கொலை செய்து கொள்வேன். வேண்டுமென்றால் என்னை திமுக கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை, நான் பதவி விலக மாட்டேன் என புஷ்பராஜ் தெரிவித்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion