மேலும் அறிய

"இந்தி நமக்கு என்ன செய்யும்? நம்மைச் சூத்திரர்களாக மாற்றும்” : எம்.பி., டி.கே.எஸ் இளங்கோவன்

இந்தியை அனுமதித்தால் நாம் அடிமைகளாக சூத்திரராக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு என்று திமுக எம்பி டிகேஎஸ்.இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியை அனுமதித்தால் நாம் அடிமைகளாக சூத்திரராக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு என்று திமுக எம்பி டிகேஎஸ்.இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தி தேசிய மொழியா இல்லையா என்பது பற்றிய விவாதம் எழுந்து சற்றே அடங்கிய நிலையில் மீண்டும் இந்தி தொடர்பாக கருத்து தெரிவித்து அடங்கிய புயலை மீண்டும் கிளப்பியிருக்கிறார் திமுக மாநிலங்களவை எம்பி டிகேஎஸ் இளங்கோவன். 

இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு:

சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.

”அமித்ஷா இந்தியரா?”:

அப்போது பேசிய டிகேஎஸ் இளங்கோவன், ஒரே மொழியாக இந்தி இருந்தால்  உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா பேசியிருக்கிறார். ஆனால் எனக்கு சந்தேகம் என்னவென்றால் அவர் இந்தியரா என்பதே எனக்கு சந்தேகமாகியிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்துவது வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான்.


நமக்கு வேறுபட்ட பண்பாடுகள், மொழிகள் இருக்கின்றன. இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோமே அது தான் உலக அளவில் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது. 1947 வரை இந்தியா ஒரு நாடே இல்லை. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. மொழி வழி மாநிலங்கள் இருக்கிறது. அதே போல வடமொழிக்கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கிப்பாருங்கள். மனு தர்மத்தை இங்கே புகுத்துவதற்காக இந்தியை திணிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.இந்தி என்ன செய்யும்.. இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும். இந்தி எந்த நன்மையும் நமக்கு செய்யாது என்றார்.


வளர்ச்சியடைந்த இந்தி பேசாத மாநிலங்கள்:

மேலும், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா,மராட்டியம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப் இவைகள் எல்லாம் வளர்ந்த மாநிலங்களா இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், ஏனென்றால் அந்த மாநிலங்களில் இந்தி தாய் மொழி இல்லை என்று கூறினார்.

வளர்ச்சியடையாத இந்தி பேசும் மாநிலங்கள்:

மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், புதிதாகப் பிரிந்த இரண்டு மூன்று மாநிலங்களில் இந்தி பேசுகின்றனர். எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், நாம் மனிதர்களாக இருக்கும் வரை இதை அனுமதிக்கக்கூடாது. இதை அனுமதித்தால் நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம்.  அடிமைகளாக சூத்திரர்களாக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு.நம்முடைய பெருமைகள் கெடும் நம்முடைய மரியாதை போகும் என்றார்.

”சூத்திரர் ஆக்கப்படுவோம்:”

நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நான் நானாக எதுவும் கூறவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன் என்ற அவர்,  வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாச்சாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம் என்று இளங்கோவன் பேசினார்.

 

வைகோ பேச்சு:

பின்னர் பேசிய மதிமுக தலைவர் வைகோ, தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்துவிடலாம் என அமித் ஷாக்கள் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் இந்தித் திணிப்பை அழிப்போம் என்றார்.

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget