H Raja Slams Suriya: ‛3 மொழி படிக்க கூடாதாம்... 5 மொழியில் படத்தை வெளியிடுவாராம்...’ ஜெய்பீம் சூர்யாவை சாடிய ஹெச்.ராஜா!
H Raja Slams Suriya: நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம் -ஹெச். ராஜா
![H Raja Slams Suriya: ‛3 மொழி படிக்க கூடாதாம்... 5 மொழியில் படத்தை வெளியிடுவாராம்...’ ஜெய்பீம் சூர்யாவை சாடிய ஹெச்.ராஜா! H Raja Criticized Suriya as selfish For Releasing Jai Bhim Movie in 5 languages H Raja Slams Suriya: ‛3 மொழி படிக்க கூடாதாம்... 5 மொழியில் படத்தை வெளியிடுவாராம்...’ ஜெய்பீம் சூர்யாவை சாடிய ஹெச்.ராஜா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/03/2281a19bc7fd3fbd6909596918043dbe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் அமேசான் மூவிஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டரில், நடிகர் சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார். இந்தி மொழி தொடர்பான விவகாரம் வந்த போது, தமிழ், ஆங்கிலம் கற்றால் போது, மூன்றாவது மொழியாக இந்தி கற்கத் தேவையில்லை என்ற கருத்தை நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், ஜெய்பீம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. இதை சுட்டிக்காட்டி தான் ராஜா தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். pic.twitter.com/nHRXKw4sjj
— H Raja (@HRajaBJP) November 3, 2021
‛‛நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்’’
என்று ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜெய்பீம் படம் வெளியான நிலையில் இதுவரை பாராட்டு பதிவுகள் மட்டுமே வெளியான நிலையில், முதன்முறையாக முக்கியத் தலைவர் ஒருவர் எதிர்ப்பு பதிவை செய்திருக்கிறார்.
ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...
‛தமிழில் பேசுடா...’ இந்தியில் இல்லாமல் போனது ஏன்? வர்த்தக சமரசம் செய்ததா ஜெய்பீம்?https://t.co/8bsnIK1BL8#JaiBhim #PrakashRaj #JaiBhimOnPrime
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jaibhim Rajakannu Manikandan | "என் அம்மா, படம் பாத்துட்டு ரெண்டு நாளா தூங்கல.." ஜெய்பீம் ’ராஜாகண்ணு’ மணிகண்டன்..#Jaibhim #Manikandan #Rajakannuhttps://t.co/jUnerYTJfN
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jai Bhim Tamizh Interview : ‛என் மனைவியே என்னைப் பார்த்து பயப்படுறா...’ ஜெய்பீம் ‛டெரர் எஸ்ஐ’ தமிழ் பேட்டி..!#Jaibhim #Tamizh #Guruhttps://t.co/fyjMAKUjIf
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)