CM Stalin : கோபாலபுரம் வீட்டுக்கு வந்த முன்னாள் உரிமையாளர் குடும்பம்..! விருந்தளித்து உபசரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மறைந்த முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்னாள் உரிமையாளர் குடும்பத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தையும், தமிழ்நாட்டின் மறைந்த முதல்வரான கருணாநிதிக்கு சொந்தமான வீடு கோபாலபுரத்தில் உள்ளது. இந்த வீட்டை கருணாநிதி 1955ம் ஆண்டு மார்ச் மாதம் சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து கருணாநிதி வாங்கினார். பின்னர், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோபாலபுர வீடு கருணாநிதி மட்டுமின்றி தி.மு.க.வின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், சரபேஸ்வரர் குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறிய பிறகு சமீபத்தில் சென்னை திரும்பினர். அப்போது, அவர்கள் தங்களது கோபாலபுர வீட்டை பார்க்க வேண்டும் என்று செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைப்பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின். சரபேஸ்வரரின் குடும்பத்தினரை இன்று அழைத்து கோபாலபுரம் வீட்டைச் சுற்றி காட்டினார்.
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “வீடு என்பது பலரது கனவு! கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு.
வீடு என்பது பலரது கனவு!
— M.K.Stalin (@mkstalin) August 28, 2022
கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன.
எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு! (1/4) pic.twitter.com/fERLsRSd6l
தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு. இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு.சரபேஸ்வரர் அவர்களிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.
தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.
— M.K.Stalin (@mkstalin) August 28, 2022
இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு.சரபேஸ்வரர் அவர்களிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.(2/4)
அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.
— M.K.Stalin (@mkstalin) August 28, 2022
அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, (3/4) pic.twitter.com/gO80B5Q3hw
அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
— M.K.Stalin (@mkstalin) August 28, 2022
இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது! (4/4) pic.twitter.com/AwGCAsf62t
அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய சரோஜா சீதாராமன் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.