தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக காயத்ரி ரகுராமை நியமித்தது தமிழ்நாடு பாஜக..
தமிழக பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் திருமதி காயத்ரி ரகுராம் நியமனம்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் திருமதி காயத்ரி ரகுராம் நியமனம்.
Thank State President @annamalai_k JI for appointing me a important role. I will do the work as per your guidance. pic.twitter.com/n6rjucYQ2V
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) June 11, 2022
பாஜகவின் முக்கிய பிரமுகராக இருப்பவர் பிரபல திரைப்பட நடிகை திருமதி காயத்ரி ரகுராம். பரபரப்புக்கு குறைவில்லாத பாஜக பிரமுகர்களில் இவரும் ஒருவர். தன்னை எப்போதும் பாஜகவின் முகமாகவே முன்னிறுத்தி செயல்பட்டு வரும் காயத்திரி ரகுராம் அவர்களுக்கு பாஜக தமிழக மாநிலத் தலைமை தற்போது பொறுப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக நியமித்துள்ளது.இவர் இதற்கு முன்னர் 2020 முதல் 2022 வரை கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் மாநிலத் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தமிழக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், அவரது நியமன ஆணையினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தன்னை இப்படியான சிறப்புமிக்கப் பிரிவுக்கு நியமித்ததிற்கு மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு நன்றி எனக் கூறி அவரையும் டேக் செய்துள்ளார். அவரை தொடர்ந்து இணையத்திலும் நேரிலும் வாழ்த்தி வருபவர்களுக்கும், தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி எனவும், மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனவும் தனது டிவிட்டரில் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளின்போது ‘ வருங்கால இந்தியப் பிரதம்ர் அண்ணாமலை’ எனக் கூறி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக நியமிக்கிப்பட்டுள்ள திருமதி. காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்திலும் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ர்ச்சிப் பிரிவின் தலைவர் எனவும் அப்டேட் செய்துள்ளார். இவர் இதற்கு முன்னர் 2020 முதல் 2022 வரை கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் மாநிலத் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்