மேலும் அறிய

Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா

Panaiyur Babu join dmk : விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்துள்ளார்.

சீட் கொடுக்காத திருமா- விலகிய பனையூர் பாபு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் தவெக அணிக்கு பல்டி அடித்து அமைச்சரவையில் இணைந்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது எம்எல்ஏவாக இருந்த பனையூர் பாபுவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்தார். இதன் காரணமாக பனையூர் பாபு தலைமை மீது அதிருப்தி அடைந்த நிலையில், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். இதனையடுத்து தேர்தல் முடிவிற்கு பிறகு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் திருமாவளவன் ஒரு நிலைப்பாட்டில் இல்லையெனவும், மாறி மாறி கருத்துகளை கூறி வருவதாக தெரிவித்திருந்தார்.

திமுகவில் இணைந்த பனையூர் பாபு

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தார் பனையூர் பாபு, அப்போது பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தான் என்னை பலருக்கு தெரியும், ஆனால் எனக்கு தாய் வீடு திமுக தான். திமுகவில் ஏற்கனவே கட்சி பணியாற்றி உள்ளதாக கூறினார். செய்யூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தாய் உள்ளத்தோடு நிறைவேற்றி கொடுத்தவர் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் என தெரிவித்தார். செய்யூர் தொகுதியில் பட்டியலினத்தவர்கள் 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போதைய அரசு தலித் மக்களுக்கு தவெக  உறுதுணையாக இருக்கும் என்பதை போன்ற பிம்பத்தை கட்டமைப்பதாகவும் தெரிவித்தார். 

திமுகவில் பனையூர் பாபுவை இணைத்தது ஏன்.?

இதனை தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், செய்யூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவையும், அவருடன் கைகோர்த்து வந்துள்ள அனைவரையும் வருக வருக என திமுக சார்பில் வரவேற்கிறேன். பனையூர் பாபுவை கடந்த ஐந்து வருடமாக சட்டமன்றத்தில் கூர்ந்து கவனித்துள்ளேன். அமைதியாக வருவார் போவார். ஆனால் பேரவையில் பேசும்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேச கூடியவர். தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை கேட்டு பெறுவார். கொள்கைவாதியாக பேச கூடியவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பான அவரது கடிதத்தை பார்த்தேன். அரசியல் மாறுபாடுகளை வேறுபாடுகளை அடக்கத்துடன் சுட்டிக்காட்டி , யாரையும் புண்படக்கூடிய வகையில் வார்த்தைகளை பயன்படுத்தாமல் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

ஸ்டாலின் போடும் செம பிளான்

திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் வேலை அதிகமாக இருக்கும். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. பல்வேறு விமர்சனங்களை அரசு எதிர்கொண்டிருக்கிறது. இந்த அரசு 3 மாதமாவது தாங்குமா என்ற நிலையில் உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.  

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் விலகி சென்ற நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் எம்எல்ஏவை திமுகவில் இணைத்திருப்பது திருமாவளவனை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வரும் நாட்களில் மதிமுகவில் இருந்து வைகோவிற்கு எதிராக விலகி சென்ற நிர்வாகிகளான மல்லை சத்யா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை கட்சியில் இணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
கூட்டணி பேசியாச்சா? அமைச்சரவையில் பாமக?
கூட்டணி பேசியாச்சா? அமைச்சரவையில் பாமக?" மேடையிலேயே அனல் பறக்கப் பதிலடி கொடுத்த அன்புமணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Embed widget