மேலும் அறிய

OPS to CM MK Stalin : பொங்கல் பண்டிகைக்கான ரூ.2,500 தொகையை தொடர்ந்து வழங்கவேண்டும் - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகைக்கு வழங்கிவந்த ரூபாய் 2 ஆயிரத்து 500-ஐ தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“பொங்கல் திருநாளையொட்டி நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்ககின்ற சூழ்நிலையில், இன்று நிதி உதவி இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் தி.மு.க. அரசு அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது என்றாலும், 2020-ஆம் ஆண்டில் இருந்து நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1000 நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. இதற்கென ரூபாய் 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது.


OPS to CM MK Stalin : பொங்கல் பண்டிகைக்கான ரூ.2,500 தொகையை தொடர்ந்து வழங்கவேண்டும் - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

இதன்தொடர்ச்சியாக 2021ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. இதற்கென 5 ஆயிரத்து 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், தி.மு.க. ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவியை கைவிட்டுவிட்டது. நடைமுறையில் இருக்கும் திட்டத்தை கைவிடுவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததை தி.மு.க அரசு செய்திருக்கிறது. இதற்கு பெயர்தான் “சொல்லாததையும் செய்வோம்” என்பது போல. இதன்மூலம் சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு அளிக்கப்பட்ட 5 ஆயிரத்து 604 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு தற்போது வெறும் ரூபாய் 1088 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு விட்டது.

கொரோனா வருவதற்கு முன்பு 2020ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கூடிய நிதி உதவியை அறிவித்தது அ.தி.மு.க. அரசு. 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் மேலும் அது அதிகரிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொரோனா தாக்கம் அதிகரித்து ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தற்போதுதான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.



OPS to CM MK Stalin : பொங்கல் பண்டிகைக்கான ரூ.2,500 தொகையை தொடர்ந்து வழங்கவேண்டும் - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்படுகிற நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. புதியதாக எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற திட்டத்தையாவது தொடர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2 ஆயிரத்து 500 ரூபாயை தொடர்ந்து அளிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget