செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?
நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க இன்று கரூர் வருகை தந்து நலம் விசாரித்தார்.
கரூரில் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கரா நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கடந்த மாதம் 16-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் சி பி சி ஐ டி போலீசாரால் அவரை கைது செய்யப்பட்டு பிறகு 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார். இதனிடையில் சி பி சி ஐ டி போலீசார் விசாரணைக்காக இரண்டு நாளும், வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது பதியப்பட்ட வழக்கிற்காக இரண்டு நாளும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் திருச்சி மத்திய சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் சிறைச்சாலையில் சென்று அவரிடம் நலம் விசாரித்து தொடர்ந்து வழக்கு பற்றி கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 31.07. 2024 அன்று ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் 9 நிபந்தனைகளுடன் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்க்கு ஜாமீன் வழங்கினார். அதை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் மற்றும் பிரவீன் உள்ளிட்டவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் சி பி சி ஐ டி அலுவலகத்தில் காலை, மாலை என இரு வேலையிலும் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாங்கல் காவல் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வெளியிட்டார்.
அதை தொடர்ந்து தற்போது வரை இரு வேலையிலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க இன்று கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாடகை குடியிருப்பு வீட்டிற்கு வருகை புரிந்து அவரிடம் நலம் விசாரித்தார்.
அதை தொடர்ந்து வழக்கு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அதிமுகவினரின் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலத்திற்கும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதன் காரணத்தால் அதை மறைப்பதற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம் ஆர் விஜய பாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரது கைது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.