திமுக ஒன்னும் சந்தோஷப்பட வேண்டாம்... உதயநிதி பட்டாபிஷேகத்தப்போ பாக்கறோம்... சி.வி.சண்முகம் பதிலடி!
”திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது” - முதலமைச்சர் ஸ்டாலின்
நேற்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.வி.சண்முகம் காட்டம்
முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதிமுகவின் நிலை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி.சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து குறித்து பேசுகையில், திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
'உதயநிதி பட்டாபிஷேகத்தில் பார்த்துக் கொள்கிறோம்’
வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது எனத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக விவகாரத்தில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சி.வி.சண்முகம் முதலமைச்சரின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதவிகள் காலாவதி
🔴 LIVE AIADMK | ஓபிஎஸ் பதவி காலாவதியாகிவிட்டது: சி.வி. சண்முகம் பேட்டி | AIADMK | OPS | EPS | https://t.co/BIdERZzh9N
— ABP Nadu (@abpnadu) June 24, 2022
அதிமுகவில் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது எனவும் இனி அந்த பதவிகள் அதிமுகவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியிலும் நீடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸை அண்ணாமலை சந்தித்தது ஏன்..? பரபரப்பு பின்னணி தகவல்கள்..
பழனிசாமிக்கு அடுத்த சிக்கல் ரெடி...! டெல்லி சென்றதும் தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பி.எஸ்..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்