மேலும் அறிய

மத்திய அரசின் அழுத்தத்தால் மின் கட்டணம் உயர்வு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?

கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு இழுத்து  மூடக்கூடிய நிலையில் இருந்தது. அரசு மானியமாக கடந்தாண்டு ரூ.9,000 கோடி வழங்கி மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மத்திய அரசு அழுத்தத்தால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விட குறைவான அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூரில் பேட்டி. கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடந்த திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்ற  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

மத்திய அரசின் அழுத்தத்தால் மின் கட்டணம் உயர்வு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?

"ஆட்சி பொறுப்பேற்றவுடன்  தமிழ்நாடு மின் வாரியத்தின் செயல்பாடு குறித்து தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தினார். இதில் மின் வாரியத்தை மேம்படுத்தும் வழிவகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மின் வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனிலும், அதற்கு ஆண்டுக்கு ரூ.16,511 கோடி வட்டியும் செலுத்தும்  நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு இழுத்து  மூடக்கூடிய நிலையில் இருந்தது. அரசு மானியமாக கடந்தாண்டு ரூ.9,000 கோடி வழங்கி மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மத்திய அரசின் அழுத்தத்தால் மின் கட்டணம் உயர்வு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?

தொடர்ந்து மத்திய  அரசு, ஒழுங்கு முறை ஆணையம், மத்திய அரசின் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கடிதஙகள் அனுப்பி வந்தன. மத்திய  அரசும் அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில் மத்திய அரசு மின் சந்தைக்கு ரூ.70 கோடி பாக்கி  வைத்த நிலையிலே மின்சாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

ஒழுங்குமுறை ஆணையத்தின்  அறிவுத்தலின் பேரில் மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் பேரில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5 கோடி நுகர்வோர்கள் உள்ள நிலையில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் 7,385 பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அழுத்தத்தால் மின் கட்டணம் உயர்வு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?

இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தேசிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து ரூ.3,217  கோடி குறைக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரஉள்ள தொழிற்சாலைகள் கருத்தில் கொண்டு மின் உற்பத்தி திட்டங்கள், டேட்டா பேஸ் நிறுவனங்களுக்கும் மட்டும் வருகின்றன ஆண்டுகளில் 2,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். புதிய மின் தேவைகளை  கருத்தில் கொண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அழுத்தத்தால் மின் கட்டணம் உயர்வு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?

நிலக்கரி டன் 143 டாலராக உள்ளது. மின்வாரிய கடனுக்கான வட்டி 9.5 சதவீதம் முதல்  13.5 சதவீதம் வரையுள்ளது. கடன் சுமையை  குறைக்க, உற்பத்தி நிறுவனங்களின் கட்டமைப்பு, விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.30, ரூ.50 என இருந்த நிலைக்கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வு என்பது ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு. சமூக ஊடங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. கடந்த 2006 -11 ஆகிய 5 ஆண்டுகளில்  மின் தேவை 49 சவீதம் உயர்ந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மின் தேவை 30 சதவீதம் கூட உயரவில்லை. அந்தளவுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மின் தேவை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 9,800 மெகாவாட் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்களை கண்டறியும் பணி  நடைபெற்று வருகின்றன. மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர மின் கணக்கெடுப்பு  செயல்படுத்தப்படும்" என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget