Edappadi Palanisamy: இறுதியாக முடிவான பொதுக்குழு தீர்மானம்.. பொதுக்குழு முடிவு தேர்தல் ஆணையத்தில் தாக்கல்..!
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பொதுக்குழுவில் பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக தாக்கல் செய்தது.
முன்னதாக, அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இபிஎஸ் ஏற்பாட்டில் செயற்குழு மற்றும் பொதுக் குழு நடைபெற தேதி குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஓபிஎஸ் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணி அளவில் கூறப்படும் என அறிவித்திருந்த நிலையில் 9 மணிக்கு தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தலாம் என இபிஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
#BREAKING | அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்புhttps://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami pic.twitter.com/CpbpuPrqV4
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
அதை தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முன்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கற்களை வீசிக்கொண்டு அந்த இடத்தை கலவர பூமி ஆக்கினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திலும், இபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் இடத்திலும் இருந்தனர். அதை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழுவில் ஏக மனதாக அதிமுக சட்ட விதிகளை மாற்றி அமைத்து, தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே .பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாளருக்கான அனைத்து உரிமைகளையும் பொதுச்செயலாளர் நிர்வகிக்க விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்