Ajithkumar: எதிர்பார்ப்பு! அஜித்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா விஜய்? தவெக பலத்தை அதிகரிப்பாரா தளபதி?
துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு விஜய் வாழ்த்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். அடிப்படையில் கார் பந்தய வீரரான அஜித் துபாயில் நடந்த எஸ்24எச் கார் பந்தயத்தில் தனது சொந்த அணியுடன் களமிறங்கினார். அஜித்குமார் இந்த பந்தயத்தில் களமிறங்கியது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அஜித்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா விஜய்?
இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. அஜித்குமார் தனது முதல் அணியாக களமிறங்கிய இந்த தொடரிலே 3வது இடம்பிடித்து அசத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து கூறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திரையுலகில் அஜித்தும் விஜய்யும் சரிசமமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர்.
ரசிகர்களின் ஆதரவு தேவை:
விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அவருக்கு அனைத்து ரசிகர்களின் ஆதரவும் தேவையாக உள்ளது. அதன் காரணமாகவே, லியோ பட நிகழ்ச்சியின்போது சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினி, கேப்டன் என்றால் விஜயகாந்த், தல என்றால் அஜித் என்று பேசினார்.
அஜித் அரசியலில் எந்தவொரு ஆர்வமும் காட்டாவிட்டாலும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளதால் அவரது ரசிகர்களின் வாக்குகள் அரசியல் கட்சிக்குத் தேவையாக உள்ளது. இதனால், சில அரசியல் கட்சித் தலைவர்கள் அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அவரது கார் பந்தய பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
எதிர்பார்ப்பு:
திரையுலகில் நேர் எதிர் போட்டியாளராக இருந்தாலும் அஜித் ரசிகர்களின் ஆதரவு வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இதனால், துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு விஜய் வாழ்த்து கூறுவாரா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் தீவிரமாக எழுந்துள்ளது.
தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விஜய் இதுவரை தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், அஜித்தின் வெற்றிக்கு விஜய் வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித்திற்கு விஜய் வாழ்த்து தெரிவிப்பது அவருக்கு மிகப்பெரிய அளவு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தும், விஜய்யும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

