மேலும் அறிய

‛நோ நோ நோ...’ ஸ்ட்ரிக்ட் காட்டிய அதிமுக! திமுகவில் இணைந்த மாஜிக்கள்! நெருக்கடியில் சசிகலா!

சசிகலா தலைமையை ஏற்பதாக கூறியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவரது தலைமைக்கு காத்திருக்காமல் திமுகவில் இணைந்திருப்பது, சசிகலாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமமுகவில் இருந்த பலர், குறிப்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பின், அதிமுகவில் இணைய சிலர்விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அப்போதே அவர்களை இணைக்க அதிமுக தலைமை மறுத்துவிட்டது. குறிப்பாக இபிஎஸ் கறாராக இருந்தார். அமமுகவில் இருந்த போது, தங்களுக்கு நெருக்கடியாகவும், கட்சிக்கு எதிராகவும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களை இணைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தேர்தல் நேரத்திலாவது மனம் மாறி ஏற்பார்கள் என்கிற எண்ணத்தில் பலர் விட்ட தூதுகள், சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தது. ஓட்டுக்காக கூட அமமுக மாஜிக்களை இணைக்க கூடாது என்பதில் அதிமுக தலைமை அப்போதும் உறுதியாக இருந்தது. தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என பொறுமையாக இருந்தனர். 



‛நோ நோ நோ...’ ஸ்ட்ரிக்ட் காட்டிய அதிமுக! திமுகவில் இணைந்த மாஜிக்கள்! நெருக்கடியில் சசிகலா!

தேர்தல் முடிந்தும் அது நடைபெறவில்லை. இதற்கிடையில் சசிகலா பலரிடம் பேசி, அந்த ஆடியோவும் வெளியானது. சசிகலா கரம் வலுப்பெறும் நாம் இணைந்து விடலாம் என காத்திருந்தனர். ஆனால், சசிகலா உடன் பேசியவர்களை விளக்கம் கேட்காமலே கட்சியை விட்டு தூக்கி வீசியது அதிமுக தலைமை. இந்த அதிரடி நடவடிக்கையை சசிகலாவே எதிர்பார்க்கவில்லை. கட்சியினரை நீக்க மாட்டார்கள், எச்சரிப்பார்கள், பேசுவார்கள் என்று தான் சசிகலா நினைத்தார். ஆனால் நினைத்தது வேறு மாதிரி இருந்தது. அதிமுகவின் அஜண்டா ஒன்று தான். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கத்தில் இருந்தாலோ, தொடர்பில் இருந்தாலோ அவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவர். அதில் அதிமுக தலைமை உறுதியாக இருந்தது. சசிகலா உடன் பேசியதற்கே கட்சியை விட்டு நீக்குகிறார்கள், இவர்கள் எப்படி சசிகலா தலைமையை ஏற்பார்கள் என்கிற கேள்வி நீக்கப்பட்டவர்களுக்குள் தற்போது எழுந்துள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்களும் சசிகலாவை எதிர்த்து கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி சசிகலாவை நம்புவதில் எந்த பயனும் இல்லை என்கிற முடிவுக்கு அவரால் பதவியை இழந்தவர்கள் சிலர் முடிவு செய்து, தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். 


‛நோ நோ நோ...’ ஸ்ட்ரிக்ட் காட்டிய அதிமுக! திமுகவில் இணைந்த மாஜிக்கள்! நெருக்கடியில் சசிகலா!

சசிகலா உடன் பேசியதால் சமீபத்தில் அதிமுகவில் நீக்கப்பட்ட மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். சசிகலா தலைமையை ஏற்கிறேன் என்பது தான் அவரது பேச்சின் சாரம்சம். அதனால் அதிமுகவில் நீக்கப்பட்டார். முறையாக அவர் சசிகலா தலைமைக்கு காத்திருக்க வேண்டும். ஆனால் அவர் திமுகவில் இணைந்திருக்கிறார் என்றால், சசிகலா மீது நம்பிக்கை இழந்திருக்கிறார் என்று தான் அர்த்தம். சசிகலாவிற்கு எதிராக அதிமுக தலைமை உறுதியாக இருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அதிமுக தலைமைக்கு மாற்றாக டிடிவி தினகரனின் தலைமையை ஏற்று சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கெனடி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்களை அதிமுக ஏற்கவில்லை என்பது ஒரு காரணம் . ஆனால், அவர்கள் நம்பிச் சென்றவர்கள், அதிமுகவை கைப்பற்ற முடியாது என்பதை உடனிருந்த இவர்கள் அறிந்திருந்தார்கள்.  அதனால், மாற்று வழியை தேடிச் சென்றுள்ளனர். உண்மையில் இது சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் சவாலான தருணம். இனி சசிகலா உடன் பேசுவோர் கவனமாக இருப்பார்கள். பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்படுவது ஒருபுறம், அடுத்து அரசியல் எதிர்காலம் என்ன என்கிற அச்சம் ஒருபுறம் என்பதை தான இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுஒருபுறம் என்றால், ‛அதிமுகவில் இருந்தவர்களை அமமுக மூலம் பிரித்து தற்போது அவர்களை திமுகவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்,’ என சசிகலா மீதும் அவரது குடும்பத்தார் மீது அதிமுக தலைவர்கள் எளிதில் குறை கூற நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இது சசிகலாவிற்கு தான் நெருக்கடியான காலம். 

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
By Elections: எனக்கு அப்பவே தெரியும்! இடைத்தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும்! தவெகவை விளாசிய இபிஎஸ்..
By Elections: எனக்கு அப்பவே தெரியும்! இடைத்தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும்! தவெகவை விளாசிய இபிஎஸ்..
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget