மேலும் அறிய

ABP Nadu Exclusive: ‛தாமரையில் நின்றிருந்தால் 100 ஓட்டு கிடைத்திருக்கும்...’ டி.கார்த்திக் பிரத்யேக பேட்டி!

D Karthik Interview: ‛வெற்றிபெற்ற  திமுக சார்பு வேட்பாளருக்கு கைகுலக்கி வாழ்த்து தெரிவித்து தான் வந்தேன். அனைத்து வேட்பாளர்களுக்குமே நான் சும்மா தான் போட்டியிடுகிறேன் என்று தெரியும்’ -டி.கார்த்திக்

சமூக வலைதளத்தை திறந்தால் ‛ஒற்றை ஓட்டு பாஜக’ ஹாஸ்டேக் ட்ரெண்ட் மற்றும் அதை ஒட்டிய பதிவுகள் மட்டுமே நேற்றிலிருந்து தொற்றியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த டி.கார்த்திக் என்பவர், கோவை பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சியில் 9வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, ஒரு வாக்குகள் மட்டுமே பெற்றதால் அவர் மீதும், அவர் சார்ந்த பாஜக மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த தோல்வி குறித்தும், பேசும் பொருளாக மாறியிருக்கும் சூழல் குறித்தும் கார்த்திக்கிடம் ஏபிபி நாடு சார்பில் சிறப்பு பேட்டி எடுக்க முயற்சித்தோம்... இதோ அவருடைய பிரத்யேக பேட்டி...

 

நீங்கள் பாஜக வேட்பாளர் இல்லை என்பது சரி, பிறகு ஏன் மோடி உள்ளிட்ட தலைவர்கள் படத்தை அச்சிட்டு நோட்டீஸ் வழங்கினீர்கள்?

நான் அந்த முடிவு எடுத்ததும் எங்கள் மாவட்ட தலைவரிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் நிற்பது வார்டு தேர்தல்; அங்கு இது போன்ற போஸ்டர் அச்சிடுவது கூட்டணிக்குள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்றார். அவர் கூறியதை ஏற்று நான் அந்த போஸ்டரை அடிக்கவில்லை. பின்னர் யார் படமும் போடாமல், எனது கார் சின்னத்தை மட்டும் போட்டு ஒரு போஸ்டர் அடித்தேன். அதை தான் வழங்கினேன். நான் செய்த ஒரே தவறு, மாவட்ட தலைவரிடம் காட்டச் சென்ற மாடலை, பேஸ்புக்கில் போட்டது தான் என்னுடைய தவறு. அதை எடுத்து தான் இப்போது ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

ஓட்டுக் கேட்கச் செல்லும் போது நீங்கள் பாஜக பிரதிநிதி என்று பிரச்சாரம் செய்தீர்களா?

கண்டிப்பா இல்லீங்க. 5 பேருடன் தான் நான் ஓட்டு கேட்கப் போனேன். அந்த 5 பேரும் என்னோட நண்பர்கள். மற்ற வேட்பாளர்களெல்லாம் கொடி பிடித்து தான் போனாங்க. நான் போகவில்லை. எனக்கு முதல் தேர்தல், எனக்கு ஆதரவு தாருங்கள் என்று தான் கேட்டேன். 

வேறு வார்டில் வசிக்கும் நீங்கள்... ஏன் சம்மந்தமே இல்லாமல் இன்னொரு வார்டில் வந்து போட்டியிட வேண்டும்?

நான் அந்த ஊராட்சியின் 4வது வார்டை சேர்ந்தவன். 9வது வார்டில் தான் இடைத்தேர்தல் நடந்தது. எனது வார்டில் தேர்தல் நடந்திருந்தால் அங்கு நின்றிருப்பேன். இதுகூட ஒரு அனுபவம் வேண்டும் என்பதற்காக தான் நின்றேன். 

எதிர்பார்த்த அனுபவம் கிடைத்ததா? திருப்தியானீர்களா?

வேற லெவல் அனுபவம்ங்க(சிரிக்கிறார்...) சொல்லவே முடியாது... நான் அதை பெரிய விசயமா எடுத்துக்கல! சரி நெக்ஸ்ட் எந்த மாதிரி பீல்ட் ஒர்க் பண்ணலாம் என்று தான் யோசித்தேன். மாநில, மாவட்ட தலைவர்கள் எல்லாருமே என்னை ஊக்கம் தான் செய்தார்கள். ஏன் இப்படி செய்தீர்கள் என யாரும் கேட்கவில்லை. 

இந்த விவகாரத்தில் அரசியலை வெறுக்கும் சூழல் உருவானதா?

வெறுக்கம் அளவுக்கு போகவில்லை. நம்மை ஏன் இப்படி பண்ணாங்கன்னு நெனச்சேன். என்னுடன் போட்டியிட்ட 5 பேரும் எனக்கு நண்பர்கள் தான். 5 பேரும் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்கள். வெற்றிபெற்ற  திமுக சார்பு வேட்பாளருக்கு கைகுலக்கி வாழ்த்து தெரிவித்து தான் வந்தேன். அனைத்து வேட்பாளர்களுக்குமே நான் சும்மா தான் போட்டியிடுகிறேன் என்று தெரியும். ஜாலியா தான் என்னிடம் பேசுவார்கள். அவர்கள் இப்படி செய்துவிட்டார்களே என்று தான் வருந்தினேன். நண்பர்களாக பார்த்தேன்; அவர்கள் அரசியலாக பார்த்துவிட்டார்களே என்று தான் வருத்தமாக இருந்தது. 

உங்களை ட்ரோல் செய்தது, உங்களோடு போட்டியிட்ட சக வேட்பாளர்கள் தானா?

அவர்கள் செய்தார்களா என்று எனக்கு தெரியாது. எப்படி இது ட்ரெண்ட் ஆச்சு என தெரியாது. எனது போட்டோக்களை பேஸ்புக்கில் எடுத்து பண்ணிட்டாங்க. என் கட்சியில் என்னை யாரும் திட்டவில்லை. பீல்ட் ஒர்க் பண்ணுங்க, உங்களுக்கானது உங்களுக்கு கிடைக்கும் என்று தான் கூறினார்கள். 

கூட்டணி சார்பில் உங்களுக்கு யாரும் உதவவில்லையா?

எந்த கட்சியிலிருந்தும் யாரும் என்னிடம் பேசவில்லை. யார் ட்ரெண்ட் ஆக்குகிறார்கள் என்றும் தெரியவில்லை. என் மீது ஏன் இந்த வெறுப்பு என்றும் தெரியவில்லை.

இது உங்கள் மீதான வெறுப்பா... இல்லை உங்கள் கட்சி மீதான வெறுப்பு?

தெரியலீங்க... லோக்கல் பாலிடிக்ஸா... வெளியூர் பாலிடிக்ஸானு தெரியல... எனக்கு எந்த ஐடியாவும் இல்லை

நீங்கள் நிச்சயம் தயாராவீர்கள் என உங்கள் தலைவர் அண்ணாமலை கூறுகிறாரே...?

கண்டிப்பா... இதே ஊராட்சியில் எனது சொந்த வார்டில் நின்று... ஜெயிச்சு... கட்சிக்கும் எனக்கும் பெயர் வாங்கித் தருவேன். ஜெயித்த பின் என் பெயரை ஹாஸ்டேக்கில் போடுவேன். இப்போ போடமாட்டேன். ஒரு ஓட்டு விழுந்தாலும் அது மகிழ்ச்சி தான். எனக்காக ஒருத்தன் போட்டிருக்காங்க; அது பெரிய விசயம்.

உங்களுக்கு ஓட்டு போட்ட அந்த ஒரு நபர் யார் என நினைக்கிறீர்கள்?

யாருன்னு கெஸ் பண்ண முடியல. ஒரு 3 பேர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்களாக இருக்குமோ என்று அவர்களிடம் நேற்று மாலை சந்தித்து பேசினேன். இன்னும் தெரியவில்லை. ஓட்டு கேட்கும் போது எனக்கு தான் போடுவதாக பலர் கூறினார்கள். குறைந்தது 50 ஓட்டுகள் வாங்குவேன் என்று நினைத்தேன். இதுவே தாமரை சின்னத்தில் நின்றிருந்தால் 100 ஓட்டுகள் வாங்கியிருப்பேன். ஜெயிக்கக் கூட செய்திருப்பேன். ஏனென்றால் இந்த வார்டில் இந்துக்கள் அதிகம்; பாஜகவினர் அதிகம். 

ஆனால்... வார்டில் கட்சி சார்பில் நிற்க முடியாதே...?

ஆமாம் நிற்க முடியாது. வேட்புமனுத்தாக்கலின் போது அதிமுக சார்பு வேட்பாளர் கட்சி கொடியோடு 60, 70 பேருடன் வந்து மனுத்தாக்கல் செய்தார். நான் 5 பேருடன் தான் சென்றேன். எந்த கொடியும் எடுத்துச் செல்லவில்லை. 

உங்கள் வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் கூட ஏன் உங்களுக்க வாக்களிக்கவில்லை?

எனக்கு முன்மொழிந்தவர்கள் அனைவருமே என்னுடை நண்பர்கள். என் மீதான அன்பில் வந்தவர்கள். அவர்களுக்கு அந்த ஊராட்சியில் ஓட்டு கூட கிடையாது. 

தேர்தலில் போட்டியிட எவ்வளவு செலவு செய்தீர்கள்?

950 ரூபாய் தான் நான் செல்வு செய்தேன். அதுவும் நோட்டீஸ் அடிக்க செலவு செய்தேன். வேறு எந்த செலவும் செய்யவில்லை. மற்றவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, 

தாமரைச் சின்னத்தில் நீங்கள் போட்டியிடுவீர்கள் என அண்ணாமலை கூறியுள்ளார் அது என்ன மாதிரியான தேர்தல்?

கண்டிப்பா மேலிடம் என்ன சொல்கிறதோ... அது எதுவாக இருந்தாலும் அதை ஏற்பேன். எந்த பதவிக்கு போட்டியிட கூறுகிறார்களாே அதில் போட்டியிடுவேன்.

மீம்ஸ்.. ஹஸ்டேக்கில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்...?

நல்லதுனு தான் நினைக்கிறேன். நமக்கு பப்ளிசிட்டியே தேவையில்லை. இப்போ எனக்கு அது நிறைய கிடச்சிருக்கு. அடுத்த முறை நான் ஓட்டு கேட்டு போகும் போது, எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கும். பாசிட்டிவா தான் இதை எடுத்துக்கிறேன். நெகட்டிவ்வா எடுத்துக்கல! 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கட்சிக்காரர்களை நான் அழைத்துசெல்லவில்லை. 5 பேரை தான் அழைத்து. கொடி பிடித்து சென்றதாக ஒருவரை கூறச்சொல்லுங்கள்.

இடைத்தேர்தல் அனுபவத்தை

வேற லெவல் அனுபவம். சொல்லவே முடியாது. பெரிய விசயம் இருக்காது. இறங்கி பீல்ட் ஒர்க் பண்ணுங்க. 

அரசியலை வெறுக்கும் அளவுக்கு சூழ்நிலை உருவாகவில்லை. 5 பேரும் எனக்கு தெரிந்தவர்ள். திமுக வெற்றி வேட்பாளருக்கு கை கொடுத்து வந்தேன். நான் சும்மா தான் நின்னேன். நான் நண்பனாக பார்த்தேன். அவர்கள் இப்படி பார்த்துவிட்டார்கள்.

யாரும் திட்டவில்லை. 

எந்த கட்சியிலிருந்தும் அழைத்தும் பேசவில்லை. நண்பர்கள் ஏன் அரசியலாக்குகிறார்கள்.

 

என்னோட வார்டில் நின்று உழைத்து, ஜெயித்து என்னோட பெயர், ஜெயித்து என்னோட ஹாஸ்டேக்

ஒரு ஓட்டு எனக்காக 

யாருன்னு தெரியல. இரண்டு மூன்று பேரை சந்தேகிக்கிறேன். அவரை சந்தித்து வருகினே். 50 ஓட்டு வாங்குவேன் என்று நினைத்தேன். தாமரையில் நின்றிருந்தால் 100 ஓட்டுகள். 

வேட்புமனுத்தாக்கல் அதிமுக படைபட்டாளத்துடன் வந்தார்கள். நான் 5 பேருடன் தான் சென்றேன். 

எனக்கு பரிந்துரை செய்தார்கள்.

செலவு பண்ணிங்க 950 ரூபாய் தான் பண்ணேன். 

தலைமை சொல்லும் இடத்தில்...

மீம்ஸ் நல்லது தான் நினைக்கிறேன். பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது. அடுத்து ஓட்டு கேட்டு வரும் பாசிட்ட

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget