மேலும் அறிய

Vikravandi ByPoll : ”திமுக-விற்கு ராசியில்லாத தொகுதியா விக்கிரவாண்டி?” அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இவர்களா..?

”விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி 2019ல் உயிரிழந்தார், 2024 திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்திருக்கிறார்”

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் என  அறிவிக்கப்பட்டதும் உடனடியாக  வேட்பாளரை அறிவித்தது திமுக. திமுக எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி காலமானதால் அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.Vikravandi ByPoll :  ”திமுக-விற்கு ராசியில்லாத தொகுதியா விக்கிரவாண்டி?” அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இவர்களா..?

மாவட்ட செயலாளர் ஆன அமைச்சர் பொன்முடியின் மகன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை திமுகவிற்கு ஆதரவு என தெரிவித்துள்ள நிலையில், அங்கு திமுக ஏற்கனவே பணிகளை தொடங்கிவிட்டது. குறிப்பாக, விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம்சிகாமணியை திமுக பொதுச்செயலாளர் நியமித்ததும் அங்கு பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகதான்.Vikravandi ByPoll :  ”திமுக-விற்கு ராசியில்லாத தொகுதியா விக்கிரவாண்டி?” அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இவர்களா..?

திமுகவில் பேசப்பட்ட பெயர்கள் – அன்னியூர் சிவா-விற்கு வாய்ப்பு

திமுக வேட்பாளராக, மாவட்ட அவைத் தலைவர் ஜெயசந்திரன், கவுதம சிகாமணி, விவசாய அணியை சேர்ந்த அன்னியூர் சிவா ஆகியோர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அன்னியூர் சிவா-வை வேட்பாளராகவும், கவுதம சிகாமணியை மாவட்ட செயலாளராகவும் அறிவித்தது திமுக தலைமை.

அதிமுக எப்போது வேட்பாளரை அறிவிக்கும் ?

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எந்த தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் முதலில் வேட்பாளரை அறிவிப்பது அதிமுக-வாகதான் இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு தலைமை தாங்கத் தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பமும் தாமதமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் யாரை வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சி.வி. சண்முகம் கைகாட்டும் நபர் வேட்பாளர்

விழுப்புரம் மாவட்ட திமுக என்றால் அது பொன்முடி-தான் என்ற ஆகிவிட்ட நிலையில், அதிமுக என்றால் அங்கே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்-தான். அப்படியிருக்கையில், சி.வி.சண்முகம் யாரை வேட்பாளராக கைக்காட்டுகிறாரோ அவரையே எடப்பாடி அறிவிப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

குறிப்பாக, விக்கிரவாண்டி தொகுதியில் முன்னர் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வன், எசலாம் பன்னீர்செல்வம், விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி ஆகியோரின் பெயர்கள் ரேசில் உள்ளது. இந்த மூன்று பேரில் ஒருவரை-தான் எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவிப்பார் என கூறப்படுகிறது.Vikravandi ByPoll :  ”திமுக-விற்கு ராசியில்லாத தொகுதியா விக்கிரவாண்டி?” அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இவர்களா..?

பாஜக கூட்டணியில் வேட்பாளரை நிறுத்தப்போவது யார் ?

விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால், அந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒரு சில தினங்களில் பேச்சுவார்த்தை முடிந்தது பாமக வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். அப்படி பாமக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டால் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தியும் அல்லது பாஜகவே நேரடியாக போட்டியிடுவது என்று முடிவு எடுத்தால் அந்த கட்சியை சேர்ந்த சம்பத் என்பருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் ?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8% மேல் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை அது பெறவுள்ளது. அதனால், விக்கிரவாண்டி தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடவிருக்கிறது. அந்த கட்சி சார்பில் வேட்பாளராக பாமக, வன்னியர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் மகள் விருதாம்பிகையை வேட்பாளராக சீமான் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகழேந்தி - பாமக
புகழேந்தி - பாமக

ராசியில்லாத தொகுதியா விக்கிரவாண்டி ?

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்த கு.ராதாமணி உடல்நலக்குறைவால் 2019ல் காலமானார். அப்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 68,842 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.  

பின்னர், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியுமே மோதினர். இந்த முறை அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை வீழ்த்தி 93,730 வாக்குகள் பெற்று திமுகவின் புகழேந்தி வெற்றி பெற்றார்.

ராதாமணியை தொடர்ந்து புகழேந்தியும் காலமானார்

2019ஆம் ஆண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.ராதாமணி காலமான நிலையில், இன்னும் 2 ஆண்டுகள் பதவி காலம் இருக்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏ புகழேந்தியும் உடல்நலக்குறைவால் காலமானார். 2016ல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றும் அவரால் தன்னுடைய பதவி காலத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. அதே மாதிரி 2021ல் திமுகவின் புகழேந்தி வெற்றி பெற்ற நிலையில் அவரும் உயிரிழந்துவிட்டார்.

இதனால், இந்த விக்கிராவாண்டி தொகுதி திமுகவிற்கு ராசியில்லாத தொகுதி என்ற பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. ஆனால், பகுத்தறிவு இயக்கமான திமுக இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் தகர்க்கும் என்றும் இந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வென்று சிறப்பாக மக்கள் பணி ஆற்றுவார் என்றும் 2026 வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வேட்பாளரே விக்கிரவாண்டி தொகுதியில் வெற்று முழுமையாக பணிகளை செய்வார் என்றும் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget