ராமதாஸின் சொந்த மாவட்டத்தில் உடைந்த பாமக... கூண்டோடு அதிமுகவுக்கு தாவல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ் இ ஏழுமலை தலைமையில் பாமகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ் இ ஏழுமலை தலைமையில் பாமகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவி வகித்து வந்த ச.இ ஏழுமலை முன்னிலையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் 14 பேர் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் நாளை இணையா உள்ள மாவட்ட மாநில பொறுப்பாளர்கள்:
மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் மலர் சேகர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் இளங்கோ படையாட்சி, முன்னாள் நகர செயலாளர் வடபழனி எக்ஸ் எம் சி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வீரா. சம்பத், முன்னாள் மாநில விவசாய சங்க செயலாளர் ஏபி அன்பு, நகர வன்னியர் சங்க தலைவர் ஞானவேல் எக்ஸ் எம் சி, நகரத் துணைச் செயலாளர் ராமன் எக்ஸ் எம் சி, நகர அமைப்பாளர் சௌந்தர் எக்ஸ் எம் சி, திண்டிவனம் 31 வது வார்டு செயலாளர் கே வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏழுமலை, வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த செந்தில் மற்றும் முன்னாள் ஒன்றிய பொருளாளர் பாவாடைராயன் ஆகியோர் அதிமுகவில் இணைய இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. மேலும் நாளை விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் இணைப்பு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் :
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்தே அது தொடர்பாக இடியாப்ப சிக்கல் போல வரிசையாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் இருந்து வெளியேறி சில நிமிடங்களிலேயே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்தவில்லை. நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாத, சரியான தலைமை இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்ன பயன் என்று ராமதாஸ் கடுமையான விமர்சனம் வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனால் பாமக செய்தி தொடர்பாளர் பாலுவோ, நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுகவிற்கும் எங்களுக்கும் இடையில் மோதல் நிலவுவது போல தோற்றம் இருக்கிறது. அது உண்மை கிடையாது என்று விளக்கம் அளித்தார். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியை ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்த அதே நாளில் பாலு இப்படி பேசியது பாமகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு இருக்க கூடிய சூழ்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமகவின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை அவர்கள் மாவட்ட கவுன்சிலர் சீட் கேட்டு உள்ளதாக தகவல் வெளியானது, இருப்பினும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட கவுன்சிலர் சீட் தருவதற்கு மறுத்ததாகவும் மேலும் பல ஒன்றிய நிர்வாகிகளுக்கும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் வழங்குவதில் சிக்கல்கள் அதிகம் நீடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறி நாளை அதிமுகவில் இணைய உள்ளதாக இன்று சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர்.