மேலும் அறிய

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

அதிமுகவில் நடைபெற்று வரும் அதிகார மோதல், தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டி வருவது இதனையெல்லாம் கவனித்த பாஜக, தனது கனவுத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருக்கிறது !

நெல்லையில் தொடரும் அ.தி.மு.க போஸ்டர் யுத்தத்தில் கூட்டணி கட்சியான பாஜக அமைதியாக இதனை வேடிக்கை பார்த்தப்படியே தனக்கான காய்களை 'கப்சிப்' என நகர்த்திவருகிறது. பாஜக மாநில துணை தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை வைத்து முட்டி மோதி கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகிகளை பாஜகவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

ஓபிஎஸ்-சா அல்லது ஈபிஎஸ்-சா என சண்டைப்போட்டுக்கொண்டிருப்பவர்களிடம் நமக்கெல்லாம் ஒரே தலைவர் மோடி தான் என முழக்கம் இட வைத்து, அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் பணியை நயினார் நாகேந்திரன் ஏற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நாளுக்குநாள் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இடையே அதிகார மோதல் வலுத்து வரும் நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தன்வசப்படுத்தும் பணிகளில் வேட்டியை மடித்துக் கட்டி களம் இறங்கியிருக்கும் நயினார், ஏற்கனவே அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக விளங்கியதாலும், நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள வரை அனைவரையும் அறிந்து வைத்திருப்பதாலும் இந்த டாஸ்க்கில் அவர் எளிதில் ஜெயித்துக் காட்டுவார் என்றே கூறப்படுகிறது.Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே, நெல்லையில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் நயினார் நாகேந்திரன், இவர் அதிமுகவில் இருந்தபோது, 2001 மற்றும் 2011ல் தேர்தலில் போட்டியிட்டு வென்று, அமைச்சரும் ஆனவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவில் நயினார் நாகேந்திரன் சேர்ந்தது பலருக்கு ஆச்சரியம் அளித்தது, பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், அப்போது, புதிய மாநிலத் தலைவர் ரேசில் இருந்தவர் நயினார், ஆனால், எல்.முருகனை பாஜக தலைமை மாநில தலைவராக நியமித்தது. அப்போது அதிருப்தியில் இருந்த நயினார் நாகேந்திரனை நேரடியாக போய் எல்.முருகன் சந்தித்து சமாதானம் செய்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், 2021 தேர்தலில் நெல்லையில் போட்டியிட சீட் வாங்கி ஜெயித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டித் திரிந்தவர், அதே மாதிரி  சீட் வாங்கி, வென்றும் காட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுக நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுக்கும் டாஸ்க் ஆற்றல் மிக்கவராக இவரிடம் தரப்பட்டுள்ளது.Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

இந்த ஒரு மாவட்டம் மட்டுமல்ல, இன்னும் பல மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு கொண்டுவரும் அசைன்மெண்ட் அந்தந்த மாவட்ட பாஜக தலைவர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதாக பகீர் கிளப்புகின்றனர். அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என்ற இரட்டை தலைமையிடையே நடைபெற்று வரும் மோதல், அதிகாரப்போட்டி இவற்றைப் பயன்படுத்தி, தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர்த்துவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக  Vs அதிமுக என்று இருப்பதை, திமுக Vs பாஜக என்ற நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் மீகத் தீவிரமாக இறங்கிவிட்டிருப்பதாகவே விவரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget