Annamalai: கரூர் பாஜக மாநாட்டில் மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
உலகத்தில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள், பிரதமர் மோடியைபிடிக்கும் என்கின்றனர். எளிதில் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி வழங்கியதும் மோடிதான்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை.
திமுக மாவட்ட செயலாளர் இல்லை என்ற குறையை தீர்க்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு பேரும், நீங்கள் நடந்து கொண்ட விதம் நிச்சயமாக சரியில்லை. நாங்கள் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். ஒரு செந்தில்பாலாஜி உள்ளே இருக்கிறார், அவருக்கு கை தடியாக சில பாலாஜி இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்கானிப்பாளர் அந்த பதவிக்கு போட்டு கூஜா தூக்கி வருகின்றனர். பாஜக தொண்டர்கள் மீது வழக்கு போடுவதில் குறிக்கோளாக உள்ளனர். கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக அழிவை நோக்கி செல்கிறது. உலகில் இந்தியாவில் மட்டும் தான் பிரதமர் நரேந்திர மோடியை 78 சதவீதம் பேர் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். அதனால் தான் நம்பர் ஒன் பிரதமர் என்று கூறினார்கள். உலகத்தில் மிக அதிகமாக பிடிக்கும் பிரதமர் நமது பிரதமர், 100-க்கு 78 பேர் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.
உலகத்தில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள், பிரதமர் மோடியை பிடிக்கும் என்கின்றனர். எளிதில் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி வழங்கியதும் நமது பிரதமர் மோடிதான். ஆனால் தமிழக முதல்வர் நம்பர் 1 என்று அவரே பட்டம் சூட்டிகொண்டார்.
அதவாது மணல் கடத்தல், சாரயம், கஞ்சா விற்பனை இதில் நம்பர் ஒன். கொலை, கொள்ளை செய்தவர்களை கைது செய்யமால் அவர்களை விட்டு விட்டு, சமூகவலைதளத்தில் பதிவிடுபவர்களை பார்த்து கைது செய்வதில் நெம்பர் ஒன்னா உள்ளனர். திமுக கொள்ளை அடிப்பதில் நெம்பர் 1, 10 ரூபாய் பாலாஜி இல்லை, 11.05 பாலாஜி தான் இந்த செந்தில் பாலாஜி, ஆட்சிக்கு வந்தவுடன் 11.05 மணல் அல்ல சொன்னவரும் இந்த பாலாஜி தான்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் மணல் கொள்ளை தடுத்த அரசு அதிகாரிகளை கொலை செய்த சம்பவம் தான் நடைபெற்றுளது. மோடி ஆட்சியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சாதனை புரிந்துள்ளது. நாடு முழுவதும் பைப் மூலமாக குடிநீர் வழங்கியதில் சாதனை. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் 2 லட்சத்திது 2 கோடி ரூபாய் சாதனை.
2 ஜி அலை வரிசையில் மத்திய அமைச்சராக இருந்த ராஜா முதலில் வரும் நபருக்கு முன்னுரிமை என்று முறைக்கேட்டில் ஈடுபட்டார். டி.ஆர். பாலு ரோடு போடுவதில் கமிஷன். தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் தொலைதொடர்பில் முறைக்கேடு. ஊழல் அமைச்சர் என்று கைது செய்து அழைத்து செல்லும்போது நெஞ்சு வலி என்று கூறியதும் தமிழக அமைச்சர்கள் பதறி சென்றுபார்த்தனர். செந்தில் பாலாஜி சங்கீதா ஹோட்டலில் இருந்து இட்லி தான் வேணுமாம், கண்டிப்பா திகாரில் கலி தான்.
செந்தில் பாலாஜிக்கு வழக்காட ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் 4 வழக்கறிஞர் வந்து வழக்காடி வந்தனர். அவருக்கு கொடுக்க பணம் எங்கு இருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/