’’சிங்கம் தந்த எங்கள் தங்கமே’’- கரூர் வி.செந்தில் பாலாஜியை தெரியும்; விவி செந்தில் நாதனை தெரியுமா?
’’சிங்கம் தந்த எங்கள் தங்கம், காவிப்படை தளபதி என போஸ்டர்களை ஒட்டி தங்களது விஸ்வாசத்தை காட்ட தொடங்கி உள்ளனர் கரூர் மாவட்ட பாஜகவினர்’’
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தனது சொந்த மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கரூர் மாவட்டத்தின் திமுக முகமாக உள்ள மதுவிலக்கு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கரூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளராக இருந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் கண்ட வி.வி.செந்தில்நாதன் பாஜகவின் புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நாள்தோறும் நடத்தி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடையும் வகையில் அவர்களுக்கான புதிய. புதிய வேலைகளும், பொறுப்புகளை வழங்கி கட்சியை ஆக்டிவாக வைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட புதிய தலைவர் வி.வி. செந்தில்நாதன் ஈடுபட்டு வருகிறார். மேலும் கரூரில் பாரதிய ஜனதா கட்சிக்கு என்று புதிய மாவட்ட அலுவலகம் தயார் செய்யப்பட்டு திறப்புவிழாவுக்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்காக காத்திருக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பாக திமுக மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் வி.வி.செந்தில்நாதனை கரூர் மாவட்ட பாஜக தலைவராக அறிவித்திருந்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்நிலையில் கரூர் மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களில் பிறந்தநாள் விழா அவரவர் சூழ்நிலைக்கேற்ப கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில் நாதனின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வால்போஸ்டர் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும், பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அதன் தொடர்ச்சியாக புதிய மாவட்ட அலுவலகத்தில் 10 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை தயார் செய்து பிறந்தநாளன்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் இதற்கு முன்பாக இருந்த அதிமுக கட்சியின் போதும், பல்வேறு பொறுப்புகள் இருந்த நிலையிலும், அவரது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடாத நிலையில் இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற உடன் அவரது பிறந்தநாளை பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடி இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கும், அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாவட்ட தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நிர்வாகிகள் கரூர் மாவட்டம் முழுவதும் அவரை வாழ்த்தும் விதமாக பல்வேறு இடங்களில் வால் போஸ்டர்களில் கரூர் மாவட்ட காவி படை தளபதி, வருங்கால கரூர் மக்களின் தலைவனை எனவும், சிங்கம் தந்த எங்கள் தங்கமே எனவும் வாசக சுவரொட்டி ஒட்டி தங்களை பதவிகளையும், அவருடைய பாசத்திலும் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.