ஒரே பேனரில் ஜெயலலிதா, கருணாநிதி..! இப்போது பேனரையே காணோம் - மதுரை வைரல்!
மதுரையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா , கருணாநிதி படங்களுடன் இருந்த பெயர்ப்பலகை இரவோடு இரவாக அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வப்போது சிறிய மாற்றங்களுடன் செயல்படும் இந்த உணவகத்தின் மூலம் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், வண்டி தொழிலாளர்கள், முதியோர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினர் பயன்பெறுகின்றனர். இப்படி மக்கள் மத்தியில் எதிர்பார்க்காத ஆதரவை பெற்ற அம்மா உணவகங்களுக்கு தி.மு.க ஆட்சியில் அமர்ந்த ஆரம்பத்திலேயே சோதனை வந்தது. சென்னையில் அம்மா உணவகத்தை தி.மு.கவினர் சிலர் சூறையாடினர். அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேனர்கள் கிழிக்கப்பட்டன.
அதன் வீடியோ வெளியே அனைத்து தரப்பினருமே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் கட்டம் கட்டப்பட்டனர். தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பனிரெண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு தி.மு.க பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன.
இந்நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டது.