மேலும் அறிய

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்

மதுபான கொள்கை வழக்கில் ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் 
வழங்கியது.

ஜாமினை நிறுத்திவைத்த டெல்லி உயர் நீதிமன்றம்:

இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். இதையடுத்து, ஜாமின் கோரி முதலமைச்சர் கெஜ்ரிவால் சார்ரபில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சாதகமாக, இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம், அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்து  இன்று வெளிவர இருந்தார்.

ஆனால், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஜாமீனை ரத்து செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் ஜாமின் உத்தரவு வழங்கி இருந்தமைக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தை நாடும் கெஜ்ரிவால்: 

இந்த நிலையில், ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த மனு மீதான விசாரணை நாளை நடத்தப்பட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள டெல்லியில் மதுபான கொள்கையை சாராய நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தி லஞ்சம் பெற்றதாக பகீர் புகார் எழுந்தது.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத்துறை கைது செய்து வருகிறது. டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா (கைதுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டார்), ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் (தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்) ஆகியோர் அமலாக்க்துறையால் கைது செய்யப்பட்டனர். அந்த வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
ABP Premium

வீடியோ

அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்
கோவையில் கொலைவெறி தாக்குதல்!போதை கும்பலிடம் சிக்கிய இளைஞர்பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Ration Card: சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Embed widget