மேலும் அறிய

9 சொகுசு கார்கள்... மணல் குவியல்... டாலர்கள்... கே.சி.வீரமணி ரெய்டில் சிக்கியதை பட்டியலிட்ட போலீஸ்!

4.987 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.சி.வீரமணி. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில், இன்று காலை 6.30 மணி முதல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் சோதனை நடத்தினர். கே.சி.வீரமணி 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்தாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், வேலூர், திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 


9 சொகுசு கார்கள்... மணல் குவியல்... டாலர்கள்... கே.சி.வீரமணி ரெய்டில் சிக்கியதை பட்டியலிட்ட போலீஸ்!

சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளானர். இதே அவர்கள் அளித்த அறிக்கை:

தமிழ்நாடு அரசு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் திரு.K.C.வீரமணி அவர்கள், அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 15.09.2021 ஆம் தேதியன்று வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண். 12/2021 u/s 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act 1988 and u/s 13(2) r/w· 13(1)(b) of the Prevention of Corruption Act 1988 as
amended in 2018 -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கு தொடர்பாக திரு.K.C.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என  சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட பெங்களூரில் இரண்டு இடங்களிலும், சென்னையில் ஆறு இடங்களிலும், ஆக மொத்தம் 35 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 16.09.2021-ஆம் தேதியன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் .34,01,060/-,1,80,000/
மதிப்பிலான அன்னிய செலாவாணி டாலர், 9 சொகுசு கார்கள் (ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் உட்பட), 5 கம்ப்யூட்டர்
ஹார்டு டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு
புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இவ்வழக்கின் எதிரியான முன்னாள் அமைச்சர் திரு.K.C.வீரமணி அவர்களின் வீட்டு
வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் (தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget