திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்
செய்யாறு விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி சொந்த செலவில் வழக்கு தொடுத்து அனைத்து வாழ்க்கைகளையும் நீக்கிக் கொடுப்பதாக என் மக்கள் யாத்திரையில் உறுதி அளிக்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தில் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.
அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள்வரை கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்யவில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆண்டுகளில் 2 லட்சத்தி 69 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியுள்ளனர். மக்களிடம் பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சி நடத்தி வருகின்றது. இதேபோன்று சென்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக எம்.பி வெற்றி பெற்றால் இளைஞர்களுடைய கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும், நீட் தேர்வை அகற்றி விடுவோம் எனவும் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதியை ஸ்டாலின் கூறி வருகிறார்.
நீட் ரகசியம் குறித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றும் சிறிய அட்டைகளில் ரகசியம் உள்ளது என்று கூறி சேலம் இளைஞர் மாநாட்டில் அந்த கையெழுத்து விளக்கம் குப்பைத் தொட்டியில் போடப்பட்டது
திமுக நடத்துகிற மருத்துவ கல்லூரியில் திமுகவின் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக சீட் கொடுப்பார்களா?
தமிழகத்தில் அமைச்சரவையில் உட்கார்ந்து கொண்டு நீட் தேர்வை எதிர்த்து பேசக்கூடிய நபர்கள் யார் என்றால் கே.என்.நேரு, கே.கே.எஸ்.ராமச்சந்திரன், டி.என்.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, ஆர் காந்தி ஆகியோர். இவர்கள் எல்லாம் படிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் ஏன் நீட்டை பற்றி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.
கல்வி என்றாலே என்னவென்று தெரியாதவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், மணல் கடத்தியவர்கள் நீட்டை எதிர்த்து பேசி வருகிறார்கள். நீட் வேண்டாம் என்றால் திமுகவினர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவ கல்லூரியில் திமுகவின் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக சீட் கொடுப்பார்கள் என்றால்,நீட் வேண்டாம் என்று நானும் உங்களுடன் போராடுகிறேன்.
திமுகவினர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1 கோடி 2 கோடி என்று சீட்டுக்கு டொனேஷன் வாங்குவதற்காகநீட் வேண்டாம் என்று திமுகவினர் போராடுகிறார்கள். பாஜகவினர் 259 வாக்குறுதியும் நிறைவேற்றியுள்ளோம். தற்போது 2024-க்கான வாக்குறுதியை செய்துவிட்டு, 2026 ஆம் ஆண்டு, உங்களிடம் வாக்கிற்காக வருவோம்.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை உயர்நீதிமன்றத்தில் நீக்கிக் கொடுப்போம்
சிப்காட் அமைப்பதற்கு தங்களுடைய விலை நிலங்களை கொடுக்க மாட்டோம் என 200 நாட்களுக்கு மேல் போராடிய விவசாயிகளின் மீது குண்டாஸ் சட்டம் போட்ட முதல் அரசு திராவிட முன்னேற்றக் கழகம். குண்டாஸ் போடப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பாஜக கட்சி களத்தில் போராடுவோம் என கூறியதை அடுத்து முதல்வர் மற்றும் ஏடிஎம் வேலு சேர்ந்து விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் அகற்றப்பட்டது.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி சொந்த செலவில் வழக்கு தொடுத்து அனைத்து வாழக்குகளை நீக்கிக் கொடுப்பதாக என் மக்கள் யாத்திரையில் உறுதி அளிக்கிறோம்.’’
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார்.