Chandrababu Naidu Convoy Attacked: பேரணியின்போது கல் வீசி தாக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் கான்வாய்.. நடந்தது என்ன?
ஆந்திர பிரதேசம் நந்திகாமா என்.டி.ஆர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை பேரணியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்குதல்.
ஆந்திர பிரதேசம் நந்திகாமா என்.டி.ஆர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை பேரணியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்.
சந்திரபாபு நாயுடு கான்வாய் மீது தாக்குதல்: அரசுக்கு எதிரான பேரணியின் ஒரு பகுதியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது இந்த சம்பவம் நடந்தது.
நந்திகாமாவின் என்டிஆர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடுவின் வாகனத் பேரணி தாக்கப்பட்டதில் அவரது முக்கிய பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மாலை 6:30 மணியளவில் நடந்ததுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒரு கல்லை வீசினர். அது தலைமை பாதுகாப்பு அதிகாரி (சிஎஸ்ஓ) மது மீது பட்டு அவர் காயம் அடைந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Andhra Pradesh | TDP leader N Chandrababu Naidu's convoy was attacked in Nandigama, NTR district earlier today, his chief security officer injured
— ANI (@ANI) November 4, 2022
Incident took place at 6:30pm. One stone was thrown by unknown miscreants. CSO Madhav was injured, probe on: CP, NTR district pic.twitter.com/eLQrjzLzqe
இந்தச் சம்பவம் என்டிஆர் மாவட்டம் நந்திகாமாவில் நேற்று இரவு நடந்தது. சந்திரபாபு சாலை பேரணி நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், விஜயவாடா எம்பி கேசினேனி நானியுடன் சந்திரபாபு காரில் சென்று பார்வையாளர்களை சந்தித்தார். அப்போது சந்திரபாபு நாயுடுவின் பின்னால் நின்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரி மதுவின் மீது கல் விழுந்தது. அந்த கல் எங்கிருந்து வந்தது என்று இதுவரை தெரியவில்லை, ஆனால் அது சி.எஸ்.ஓ மதுவை தாக்கியது. சந்திரபாபுவுக்கு இசட் பிளஸ் (z plus)அளவிலான பாதுகாப்பை மத்திய அரசு அனைவருக்கும் தெரிந்ததே. பாதுகாப்பையும் மீறி இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. மது மீது அந்த கல் விழுந்து ரத்தம் கசிய ஆரம்பித்ததும், அவர் சந்திரபாபுவிடம் தகவல் கொடுத்தார். பிறகு அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) கமாண்டோக்கள் உஷார் படுத்தப்பட்டு நாயுடுவைச் சுற்றி வளைத்தனர்.
இந்த நிகழ்வு அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்ப்படுத்தியது. நாயுடுவின் வாகனத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர் பயண நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கல் வீச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்து போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.
బాబుగారి కి తిట్లు కూడా రావాయే !
— Banganapalle TDP Official (@BanganapalleTdp) November 4, 2022
ఆయనకు వచ్చిన పెద్ద తిట్టు ఖబడ్దార్, మీ గుండెల్లో నిద్ర పోతా... ఇవే ఆయనకు వచ్చిన తిట్లు..#TeluguDesamParty #NaraChandrababuNaidu#ITDP #TDPWillBeBack #YCPDestroyedAP#JaganFailedCM pic.twitter.com/5EzZOopDAL
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி காவல் துறை அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.