![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Tamilisai : 26 சாதியினரை BC பட்டியலில் சேர்க்கவேண்டும் - ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை
பிசி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 26 சாதியினரை மீண்டும் அதே பட்டியலில் இணைக்க வேண்டும் என, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
![Tamilisai : 26 சாதியினரை BC பட்டியலில் சேர்க்கவேண்டும் - ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை Andhra Pradesh BJP Leaders Meet Telangana Governor Tamilisai Soundararajan Tamilisai : 26 சாதியினரை BC பட்டியலில் சேர்க்கவேண்டும் - ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/c3e6b4dcc3a0547ff1d23d6ef3cbae291669311202989109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஐதராபாத்தில் உள்ள, ஆளுநர் மாளிகையில் பாஜக மாநிலங்களவை எம்.பி. லட்சுமன் சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களும் உடனிருந்தனர்.
Given a representation to H.E. Governor of Telangana, Smt @DrTamilisaiGuv garu, to recommend CM of Telangana to re-include 26 castes in the list of Backward Classes #OBC, that was earlier part of it in the then state, Andhra Pradesh.@blsanthosh pic.twitter.com/35XGtRfeIW
— Dr K Laxman (@drlaxmanbjp) November 24, 2022
26 சமூகங்களை BC பட்டியலில் சேர்க்க கோரிக்கை:
சந்திப்பின்போது, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விளக்கி கூறி, அதுதொடர்பான மனுவையும் ஆளுநரிடம் வழங்கினர்.ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இருந்த 26 சமூகங்களை, தெலங்கானா அரசு அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும், மீண்டும் அச்சமுகத்தினரை பிற்படுத்தப்பட்ட சாதிபட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
Held brainstorming session with Intellectuals & Prominent citizens at Raj Bhavan #Hyderabad.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 24, 2022
Discussed on diverse topics
like Tribal development, Health, Youth empowerment, National Educational Policy @NEP2020 for overall development trajectory for #Telangana state. pic.twitter.com/sQ7jLYWs1f
துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை:
அதைதொடர்ந்து, பல்வேறு துறைசார் வல்லுநர்கள் உடனும், தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் மளிகையில் ஆலோசனை நடத்தினார். பழங்குடியினர் மேம்பாடு, சுகாதாரம், இளைஞர் அதிகாரம், தேசிய கல்விக் கொள்கை என, தெலங்கானா மநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)