மேலும் அறிய
Advertisement
ஓபிஎஸ் பாஜகவில் இணைகிறாரா..? வித்தியாசமான முறையில் வைக்கப்பட்ட பேனர்..!
ஓபிஎஸ் பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டமோ என முனுமுனுத்தபடி, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கோஷ்டியினர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பேனர் வைத்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக அணிக்கு அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்த ஆர்வி ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருந்தார்.
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கோஷ்டியினர், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பேனர் வைத்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு. pic.twitter.com/hHEiI2Mvux
— Kishore Subha Ravi (@Kishoreamutha) July 28, 2022
அதன்படி புதிய மாவட்ட செயலாளராக ஆர்.வி.ரஞ்ஜித்குமாரை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி. ரஞ்சித் குமார் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பிரசித்தி பெற்ற முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.
மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பெரிய அளவில் இடம்பெற்று, ஓபிஎஸ் வணங்குவது போல பேனர்கள் வைக்கப்பட்டதால் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விளம்பர பேனர்களை பார்த்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டமோ என முனுமுனுத்தபடி விளம்பர பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
தொடா்ந்து, ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக நகரச் செயலருமான ஆர்வி ரஞ்சித் மேலும் கூறியது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவா் ஓ.பன்னீா்செல்வம். அவரால், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நான் நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி கட்சியை பிளவுபடுத்தியிருக்கிறாா். அதிமுக தொண்டா்கள் அனைவரும் ஓ.பி.எஸ். அணியில்தான் உள்ளனா்.
பணத்துக்காக செயல்படும் கூட்டம்தான் இ.பி.எஸ். அணியில் உள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகள், 51 மாமன்ற வாா்டுகள், 9 ஒன்றியச் செயலா்கள் உள்பட மொத்தம் 13,000 நிா்வாகிகள் ஒரு வாரத்தில் நியமிக்கப்படவுள்ளனா். தொண்டா்கள், மக்களுக்காக தொடா்ந்து உழைப்போம் என்றாா். நிகழ்வின் போது, ஓ.பி.எஸ்.அணி ஆதரவாளா்கள் பலா் உடனிருந்தனா்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion