Tamil Magan Hussain: ‛சிறுபான்மையினராக என்னை அதிமுக நடத்தவில்லை...’ -அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் பேட்டி!
தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டவன் நான். அவர்கள் எனக்கு பல்வேறு பதவிகள் வழங்கி என்னை கவுரவப்படுத்தினர். -தமிழ் மகன் உசேன்
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினரான அன்வராஜா, நிலோபர் கபில் போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இசுலாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தமிழ் மகன் உசேனை அதிமுக நியமித்துள்ளது.
#JUSTIN அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். வாழ்த்துhttps://t.co/wupaoCQKa2 #ADMKNewPresidiumChairman #TamilMaganHussain #AIADMK | #EdappadiPalaniswami | #OPanneerselvam | #TNPolitics pic.twitter.com/dPyGm7DnPH
— ABP Nadu (@abpnadu) December 1, 2021
தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டவன் நான். அவர்கள் எனக்கு பல்வேறு பதவிகள் வழங்கி என்னை கவுரவப்படுத்தினர். அதேபோல், தான் தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் எனக்கு தற்காலிக அவை தலைவர் பதவி கொடுத்து என்னை அழகு பார்க்கிறார்கள். நான் சிறுபான்மையினர் ஆனாலும் இதுவரை அதிமுக கழகம் என்னை அப்படி நடத்தவில்லை. கழகத்தின் கொள்கைக்கு கட்டுபட்டு நான் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மதுசூதனன் மறைவை தொடர்ந்து அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ் மகன் உசேனுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்கள். அதிமுக அவைத் தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்படுபவரை அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டியாது விதிமுறையாகும். இனி செயற்குழு, பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் அவைத் தலைவருக்கு மட்டுமே இருக்கும். கட்சிக்கு பொதுச்செயலாளரோ அல்லது இப்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர்களோ செயல்படமுடியாத நிலையில் உள்ளபோது கட்சியின் தலைவராக இருந்து அறிவிப்புகளை வெளியிடக்கூடிய அதிகாரம் அவைத் தலைவருக்கு உண்டு
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்https://t.co/wupaoCQKa2 | #AIADMK | #EdappadiPalaniswami | #OPanneerselvam | #TNPolitics pic.twitter.com/v7yH3LvRDU
— ABP Nadu (@abpnadu) December 1, 2021
தற்காலிக அவைத் தலைவர் என குறிப்பிட காரணம், பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்காக தான். மற்றபடி அவர் அவைத் தலைவர் தான். பொதுக்குழு ஒப்புதல் பெறும் அவரை தற்காலிக அவைத் தலைவர் என குறிப்பிடுவார்கள். ஆனால், அவர் தான் அவைத் தலைவர். பொதுக்குழு ஒப்புதல் சம்பிரதாயம் தான்.
யார் இந்த தமிழ் மகன் உசேன்?
எம்ஜிஆர் மன்ற செயலாளரான தமிழ் மகன் உசேன் அதிமுக ஆட்சியில் வக்ஃபுவாரிய தலைவராக இருந்தார். கன்னியாகுமரியைச் சேர்ந்த தமிழ் மகன் உசேன், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியே முதல் கட்சியில் இருந்து வருகிறார். அவர் எம்பி பதவி கோரிய நிலையில், தற்போது அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவைத்தலைவர் போட்டியில் செம்மலை, செங்கோட்டையன், பொன்னையன் ஆகியோர் இருந்தனர். இதில், செம்மலை, பொன்னையன் ஆகியோர் முன்னணியில் இருந்த நிலையில், தமிழ் மகன் உசேனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்