ADMK General committee case Live : அதிமுக பொதுக்குழு வழக்கு - விசாரணை தொடங்கியது..!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
LIVE
Background
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டர். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழு முடிவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்திலும் ஜூலை 13 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான மனுவில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கவும், விதியை மீறி இது நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விதிப்படி பொதுக்குழுவை நடத்தவே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த பொதுக்குழு விதியை மீறி நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், அதிமுக தலைமை நிலைய செயலகம் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இருதரப்பும் சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என இருதரப்பும் உறுதியாக தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ்க்கு வலியுறுத்தல்
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ்க்கு வலியுறுத்தல்
மீண்டும் இணைய வாய்ப்பில்லை - இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு
மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா என உச்சநீதிமன்றம் கேட்டதற்கு இல்லை என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பதில்