AIADMK Executive Meeting LIVE: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்
AIADMK Executive Committee Meeting LIVE Updates: அதிமுகவின் கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
LIVE
Background
கட்சியின் முக்கிய முடிவுகள் பெரும்பாலும் செயற்குழுவில் தான் எடுக்க முடியும். செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் பேரில் தான் முடிவுகள் எட்ட முடியும். அந்த வகையில் அதிமுக செயற்குழுவில் முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முக்கிய முடிவாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் என அறிவித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிமுகவின் கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கும் நிலையில், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் அதிகாரத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
அதிமுக சார்பில் நியமிக்கப்பட்ட வழிகாட்டு குழுவை கலைப்பதற்கான முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், பாஜகவில் இணைந்த நிலையில், வழிகாட்டு குழு மீதான விமர்சனம் கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்தது. எனவே வழிகாட்டுதல் குழுவை கலைக்க ஓபிஎஸ்-இபிஎஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகிறது.
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியே - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான நடவடிக்கையே கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக செயற்குழுவில் சிறப்பு தீர்மானம்
அதிமுக சட்டவிதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக் குழுவுக்கே அதிகாரம்
அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு என்ற புதிய விதியை மாற்ற பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை
புதிய விதியை மாற்றம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரமில்லை
விதிமுறைகள் திருத்தத்திற்கு பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ய உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு - சட்ட விதியில் திருத்தம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பவர் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்