ADMK Jayakumar: ‛அன்வர் ராஜாவை நீக்காவிட்டால் அனைவரும் பேச ஆரம்பிப்பார்கள்...’ - ஜெயக்குமார் பேட்டி!
சென்னை ராயப்பேட்டையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதாலேயே அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், நடவடிக்கை எடுக்காவிடில் அன்வர் ராஜா போல் மற்றவர்களும் பேசுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் முறையை மாற்ற செயற்குழுவில் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.
#BREAKING | அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியே - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்https://t.co/wupaoCQKa2 | #AIAMDK | #AnwarRaja | #Djayakumar | @offiofDJ pic.twitter.com/81cKWvKjaD
— ABP Nadu (@abpnadu) December 1, 2021
முன்னதாக, அதிமுகவில் சாதி, மதம் பார்ப்பதில்லை என செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். கட்சிக்கு ஊறு விளைவித்தவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக செயற்குழு கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்ய சட்டவிதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் விதியை தளர்த்துவதற்கும் விதிவிலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதியை மாற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரமில்லை.
மேலும், அதிமுக சட்டத்திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். சிறுபான்மையினரான அன்வராஜா, நிலோபர் கபில் போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இசுலாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தமிழ் மகன் உசேனை அதிமுக நியமித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்