மேலும் அறிய

‛சசிகலா வந்தால் நிலைக்கும்... ஸ்டாலினின் குறையற்ற ஆட்சி...’ இருபக்கமும் துண்டு போடும் புகழேந்தி!

சசிகலா தங்களுக்கு முன்பாக ஆய்வு செய்துவிடுவாரோ என்ற பயத்தில் ஓபிஎஸ் , எடப்பாடி பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி , ஓ .பன்னீர்செல்வம் மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இதோ...

"முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி , ஓபிஎஸ் மீது நான் தொடுத்துள்ள மான நஸ்ட வழக்கு 11.12.2021 டிசம்பருக்கு ஒத்தி வைப்பு. ஆர்வத்துடன் தீர்ப்பிறக்காக காத்துள்ளேன. சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அது அமையும். இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக பேசுவதாக கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி இந்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றனர் . இவர்கள் ஒருங்கிணைப்பாளரா என்பதற்கான வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது. அதிமுகவின் பொதுக்குழு கூடினால் அது  நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும். 


‛சசிகலா வந்தால் நிலைக்கும்... ஸ்டாலினின் குறையற்ற ஆட்சி...’ இருபக்கமும் துண்டு போடும் புகழேந்தி!

சசிகலா போட்டி பொதுக்குழுவை கூட்ட வாயப்புள்ளது. பரிதாப நிலையில் அதிமுக உள்ளது. பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் எடப்பாடிக்கு உரிமை இல்லை . பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு  நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும். தேர்தலில் தோற்று கட்சியே அசிங்கமாக இருக்கும் நிலையில் மா.செ கூட்டம் தேவையா? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கேட்கும் மனநிலையிலேயே நிர்வாகிகள் இல்லை. கொள்ளை அடித்த முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடட்டும் . 

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களே அதிமுகவிற்கு கிடைக்கும்.  கோவை , சேலம் உட்பட ஒரு மாநகராட்சியும் அதிமுக வெல்லாது. நடைபெற உள்ள தேர்தலில்  வெற்றி பெறும் தகுதியுடன் , குறையற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். 

தஞ்சையில் மழை வெள்ளம் பாதித்த  பகுதியை பயந்து பயந்து இரவில் சென்று பார்வையிடுகிறார் எடப்பாடி . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 90 விழுக்காடு பணத்தை எடப்பாடி பழனிசாமி கொள்ளை அடித்தார். ஊழலில் ஈடுபட்டவர்களை இன்னும்  கைது செய்யவில்லை என திமுக மீது வருத்தம் உள்ளது.

சசிகலா தங்களுக்கு முன்பாக ஆய்வு செய்துவிடுவாரோ என்ற பயத்தில் ஓபிஎஸ் , எடப்பாடி பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். சசிகலாவை ஏற்றால் மட்டுமே கட்சி நிலைக்கும். சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்வார் . நகர்ப்புற தேர்தலின் பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்க வாய்ப்பு உள்ளது. 


‛சசிகலா வந்தால் நிலைக்கும்... ஸ்டாலினின் குறையற்ற ஆட்சி...’ இருபக்கமும் துண்டு போடும் புகழேந்தி!

தற்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு பெரிதாக இல்லை. 700 விவசாயிகளின் சமாதியில் எழுதப்பட்டதுதான் வேளாண் சட்டம் வாபஸ் என்பது. திமுகவில் இணைவதே இல்லை என பேசவில்லை..எனது கட்சிக்காக பேசுகிறேன். சசிகலாவை இருவரும் தேடிச் சென்று கட்சியில் இணைக்க வேண்டும். 


‛சசிகலா வந்தால் நிலைக்கும்... ஸ்டாலினின் குறையற்ற ஆட்சி...’ இருபக்கமும் துண்டு போடும் புகழேந்தி!

சசிகலாவை கட்சியில் இணைப்பது  தொடர்பாக ஓபிஎஸ் மனநிலை வானிலை போல அவ்வப்போது மாறும் . சசிகலா பெயரை வைத்து கட்சிக்குள் நாடகமாடுகிறார் ஒபிஎஸ். சர்வாதிகாரம் செய்ததாக ராமதாசை கைது செய்தார் ஜெயலலிதா, ஆனால் அவருடன் கூட்டணி வைத்துள்ளனர் இன்று .  

சாதி பற்றி அறியாதவர் கே.பி.முனுசாமி. அவர் சாதி பேசியதால்தான் ஜெயலலிதாவால் சில காலம்  வெளியேற்றப்பட்டார் . கே.பி .முனுசாமி சாதி தலைவர். பாமக தொடர்பாக அவர் ஒருபோதும் பேசமாட்டார். கட்சியில் தற்போது ஆட்சி மன்ற குழு கூடுவதே இல்லை. நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே நிர்வாகிகளை ஓபிஎஸ் , இபிஎஸ் நீக்கி வருவது போல , சசிகலாவும் மாவட்ட , ஒன்றிய , நகர செயலாளர்களை நீக்க முடியும். அதிமுகவில்   செயல்படாத நிர்வாகிகளை நீக்க சசிகலாவுக்கும் உரிமை உண்டு " என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Vijay vs Nainar Nagendran : பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Ultraviolette Bike Offer: உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
Longest Range EVs: ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
Embed widget