மேலும் அறிய

S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவிகிதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும் என நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதேசமயம் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாஜக,நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். ஆனால் கடந்த தேர்தலை காட்டிலும் தங்களுடைய வாக்கு வங்கி சதவிகிதம் உயர்ந்திருப்பதாக தோல்விக்கு பின்னர் அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். 

இதனிடையே நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் அண்ணாமலை மற்றும் பாஜக தோல்வி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவிகிதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் கட்சியை காவல் நிலையம் போல நடத்துகிறார். பாஜகவில் இணைந்ததும் என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார். இன்னைக்கு என்னை தெரியவில்லை என சொல்கிறார். சிலருக்கு சில நேரம் அதிர்ச்சியில் அம்னீசியா வந்து விடும். கொஞ்சம் தெளிய விட வேண்டும். எனவே அவரை ஊடகம் தொந்தரவு செய்ய வேண்டாம். சிலருக்கு மைக்கை கண்டால் உளறல் ஆரம்பித்து விடும். அந்த மாதிரி தம்பி அண்ணாமலை கொஞ்சம் உடல் நலத்தை பார்ப்பது நல்லது. 

அண்ணாமலை என்னை தெரியாது என சொன்னார். ஆனால் மோடியை போய் கேட்டு பாருங்கள். எஸ்.வி.சேகர் யாருன்னு சொல்லுவார். இன்னும் கொஞ்ச நாள் போனால் மோடிக்கு அண்ணாமலை யாரென்றால் தெரியாமல் போய் விடும். தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவிகிதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பது தான் உண்மை. 21 தொகுதியில் மட்டுமே நின்றிருக்கிறார்கள். பாஜக பெற்ற ஓட்டுகள் கூட்டணியில் இருந்த தமாகா, புதிய நீதிக்கட்சி, அமமுக,பாமகவின் ஓட்டுகளும் சேர்த்து தான். வெட்கமே இல்லாமல் போய் சொல்ல வேண்டும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்” என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

Embed widget