மேலும் அறிய

சொன்னதைக் கேட்காமல் சுயேச்சை.. 56 பேரை கட்சியிலிருந்து நீக்கிய திமுக!

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, தஞ்சை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 56 பேரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  கட்சியின் விதியை மீறிய திமுக சுயோச்சை வேட்பாளர்கள் 56 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டதால் அவர்களை இடைநீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, தஞ்சை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 56 பேரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயேச்சையாக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல், ஈடுபட்ட வேட்பாளர்களை இடைநீக்கம் செய்வதற்கு கட்சி தலைமை ஆயுத்தமாகி வருகிறது. இதன் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயலாளர்களும் / சில இடங்களில் பொறுப்பு அமைச்சர்களில் சிலரும் சரியாக வேலை பார்க்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் வந்திருக்கிறது. இதனால், கடும் கோபமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை தனது திண்டுக்கல் பரப்புரை கூட்டத்தை முடித்த கையோடு, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் என அத்தனை பேரையும் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்.


சொன்னதைக் கேட்காமல் சுயேச்சை..  56 பேரை கட்சியிலிருந்து நீக்கிய திமுக!

அப்போது, ’இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உங்களது மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றியை பெற வேண்டும். அப்படி அதிக இடங்களை கைப்பற்றி காட்டுபவர்கள் மட்டும் அறிவாலயம் பக்கம் வாருங்கள், முடியாதவர்கள் அப்படியே போய்விடுங்கள்’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு, மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவர்களின் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அமைச்சர் பத்வியும் பறிக்கப்படும் என்றும் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிக இடங்களில் வென்று காட்டி அதிமுகவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்றும் கொதித்திருக்கிறார்.

இதனால், சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் சிலரும் பொறுப்பு அமைச்சர்கள் சிலரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நம்முடைய பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய அடுத்த விநாடியே தங்கள் மாவட்டத்தின் நிர்வாகிகளை அழைத்து தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget