மேலும் அறிய

EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் முதல்வர் வேட்பாளர் யார்?

பாஜகவை சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சொன்னதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறிய இபிஎஸ், விஜய்யை முதல்வராக்கி விடுவாரா என பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது விவாதமாக மாறியுள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி வேலைகள் தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக இந்த முறை வலுவான கூட்டணியை அமைத்து விட வேண்டும் என திமுக கூட்டணியிருக்கும் தூது அனுப்பி வருகிறது அதிமுக. அதுவும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

விஜய்யுடன் அ.தி.மு.க. கூட்டணி?

அதிமுக தரப்பில் இருந்து விஜய்க்கு 60 சீட் தருவதாகவும், அமைச்சரவையில் இடம் ஒதுக்கி தருவதாகவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் விஜய் பற்றிய ஆலோசனை நடந்துள்ளது.

என்ன நடந்தாலும், முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் இருந்து தான் இருக்க வேண்டும் என அக்கட்சியினர் தெளிவாக சொல்லியுள்ளனர். வேண்டுமானால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாக பேசிப் பார்க்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு விஜய் ஒத்துவருவது சந்தேகம் தான் என பேச்சு இருக்கிறது. அதிமுகவினர் மத்தியிலும் இதே விவாதமே நடந்து வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய பன்ருட்டி ராமச்சந்திரன் கருத்து:

அதிமுக மூத்த தலைவரும், தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருக்கக் கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன், இபிஎஸ்-ன் கூட்டணி ப்ளான் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என அடித்து சொல்லியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ள திமுக கூட்டணி பலமாக இருப்பதாகவும், அதற்கு எதிரில் யாரும் வலுவாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

அதேபோல் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் இருக்கும் சிக்கல் தொடர்பாகவும் பேசியுள்ளார். இபிஎஸ், விஜய்யை முதல்வராக்க ஒத்துக் கொள்ள மாட்டார், அதேபோல் விஜய்யும், இபிஎஸ்-ஐ முதல்வராக்குவதற்கு நிச்சயம் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதே காரணத்திற்காக தான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் விஜய் யோசனையில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. 

முதல்வர் வேட்பாளர்:

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொன்னதால், கூட்டணியில் இருந்து விலகிய இபிஎஸ், விஜய்க்கு மட்டும் பதவியை தூக்கி கொடுத்து விடுவாரா என பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லியுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதன் பின்னணியில் அண்ணாமலையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டன. தற்போது முதல்வர் வேட்பாளர் விவகாரம் தான் காரணம் என சொல்லியுள்ளது விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Embed widget