(Source: ECI/ABP News/ABP Majha)
1 Year of Stalin Govt: சோஷியல் மீடியாவில் வரும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை குறித்து ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
கடந்த ஓராண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதவியை கோருகின்றனர். இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று? ஏபிபி சி வோட்டர் அரசியல் கட்சியினரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் சமூக வலைதள வீடியோக்களில் உதவிகோரும் நபர்களை அழைத்து பேசுவது பற்றி?
ஆரோக்கியமான நடவடிக்கை :
சமூக வலைதளங்கள் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை என்று தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியினர் 74.4 சதவீதம் பேரும், தி.மு.க. கூட்டணியினர் 45.9 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 76.5 சதவீதம் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 64.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 71.4 சதவீதம் பேரும், மற்றவர்கள் 60 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். முதல்வரிடம் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் உதவி கோருவது ஆரோக்கியமானது என்று மொத்தம் 65.2 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
விளம்பரத்திற்காக செய்பவை, பெரிதுபடுத்த வேண்டியதில்லை :
சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் உதவி கேட்பது போன்றவை எல்லாம் வெறும் விளம்பர செயல் என்று தி.மு.க. கூட்டணியினர் 25.6 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 54.1 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 23.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 35.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் 28.6 சதவீதம் பேரும், மற்றவர்கள் 40 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 34.8 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.
ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்த கூடுதல் தகவல்களை ஏபிபி யூ ட்யூபில் காணலாம்
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்