மேலும் அறிய

திருவாரூர்: அரசு சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

’’உயிரிழந்த தொழிலாளி நடராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு உரிய அரசு வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி’’

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி இறக்கும் பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார்குடி அடுத்த பாமணி கீழ தெருவைச் சேர்ந்த நடராஜன், சத்யா, மற்றும் காரைக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்தி ஆகிய மூன்று தொழிலாளர்கள் காலை வழக்கம்போல் நெல் சேமிப்பு கிடங்கு வேலைக்கு சென்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ராட்சத தார்பாய்கள் கொண்ட  தனி தனி அட்டிகளாக மூடப்பட்டிருந்தது.

திருவாரூர்: அரசு சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
இந்த நிலையில் காலை முதல் வெயில் அடித்ததால் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவர் நின்று கொண்டு தார்பாய்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது மேலே இருந்து நெல் மூட்டைகள் அனைத்தும் திடீரென நடராஜன் மீது சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் ஜேக்கப், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர்  தனராஜ், ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
 
மேலும் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நடராஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்கப்படும், அரசு வழங்கும் உதவிகள் விரைந்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து மன்னார்குடி நகர காவல் உதவி ஆய்வாளர் முருகன் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்களின் உதவியோடு நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவாரூர்: அரசு சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
 
இது குறித்து தகவல் அறிந்த திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து நடராஜனின் கிராமத்திற்கு நேரில் சென்ற எம்எல்ஏ பூண்டி கலைவாணன் இறந்த நடராஜனின் மனைவி செல்வராணி மகன்கள் அரிராஜ் அருண்ராஜ் மெர்வீன் ராஜ் ஆகியோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?

Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்

ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்

Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்

TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

Embed widget