மேலும் அறிய

மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

நரிக்குறவர்களின் தற்காலிக கூடாரத்தை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. பசுமை வீடுகளை மட்டுமல்லாது தங்களின் குழந்தைகள் படிப்பு, தங்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி புதியபேருந்து நிலையம் அருகே நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் 52 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் கடந்த 20 ஆண்டு காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.முதலில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது மாற்றப்பட்ட இச்சமுதாயத்தினர் தற்போது புதியபேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கைகளை வைத்திருந்தனர்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ரவிகுமார் நரிக்குறவர்களுக்கு வசவப்புரம் கிராமத்திற்கு உட்பட்ட அனவரதநல்லூர் அருகே பரம்புவில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பத்தினருக்கு முதற்கட்டமான வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இதனையடுத்து நரிக்குறவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் அல்லது இந்திராகாந்தி நினைவு திட்டத்தின்கீழ் குடியிருப்புகள் வழங்கப்படுமென தெரிவித்து இருந்தார். முதலில் நரிக்குறவர்கள் அப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தால் மட்டுமே இருப்பிடச்சான்று உள்ளிட்டவைகள் வழங்கமுடியும் எனத்தெரிவித்து இருந்தார்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

இதனையடுத்து நரிக்குறவர்கள் அப்பகுதிக்கு சென்று தற்காலிக கூடாரம் அமைக்க முற்பட்டபோது முற்றிலும் பரம்பு பகுதியாக இருந்ததால் கூடாரம் அமைக்க இயலவில்லை தங்களுக்கு பரம்பு பகுதியை சீரமைத்துதரவும் குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் பரம்பு பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையை அடுத்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் அருகே தங்களது கூடாரங்களை அமைத்து வாழ்வாதாரத்தை துவங்கினர்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை
புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் இவர்களுக்கு தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக கூடாரத்திற்குள் இருக்க முடியவில்லை இதனால் பேருந்து நிலையத்தில் படுக்க வேண்டிய சூழல் உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் மற்றும் அமைச்சரை சந்தித்து கோரிக்கை அளித்து இருந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் கடந்த ஆண்டு நேரில் நரிக்குறவர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர்கள் அணிவித்த பாசிமாலையை அன்புடன் ஏற்றுகொண்ட அவர், அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்டவைகள் உடனே வழங்கவும், தூத்துக்குடி அருகில் விரைவில் நிலம் வழங்கி பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அவருக்கு நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

இது தொடர்பாக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாவீரன் நம்மிடம் அப்போது தெரிவித்தபோது, , 30 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் எவ்வித அடையாளமும் இல்லாமல்  வசிப்பதாக கூறும் இவர், மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் தங்கும்போது பல்வேறு இன்னல்களை அளிப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை போடுவதாக அதிகாரிகள் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் தங்களது குறைகளை தெரிவித்து உள்ளதாகவும் , தற்போது மாவட்ட நிர்வாகம் ஆதார் அட்டை எடுக்க சொல்லி உள்ளதாகவும் நல்லது நடக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

இதனை தொடர்ந்து அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், நரிக்குறவர்களின் வாழ்வாதாராம் பாதிக்காத வகையில் தூத்துக்குடியில் இருந்து பத்து பதினைந்து நிமிட பேருந்து பயணம் செய்து வரக்கூடிய பகுதியில் உரிய நிலம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.இதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி பகுதியில் நரிக்குறவர்கள் 52 பேருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டு அதற்கான பட்டாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

தற்போது மழைக்காலமும் துவங்கிவிட்டது. தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் நரிக்குறவர்களின் தற்காலிக கூடாரத்தை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. பசுமை வீடுகளை மட்டுமல்லாது தங்களின் குழந்தைகள் படிப்பு, தங்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இவர்கள். மழையோ பனியோ புயலோ தங்களது குழந்தை குட்டிகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

தலைப்பு செய்திகள்

" 10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
TVK:
TVK: "பண்ணையார் வீட்டுக் குழந்தை உளறல் நிதி.." உதயநிதியை விளாசிய தவெக!
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget