மேலும் அறிய

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன் - காரணம் என்ன..?

ராசிமணல் அணைக்கட்டும் பணியை  தமிழ்நாடு அரசு உடனடியாக துவங்க வேண்டும், மறுத்ததால் ஒட்டுமொத்த காவிரி டெல்டாவில் போராட்டத்தை தீவிரப்படுத்துவேன் என எச்சரிக்கை விடுப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரியில் கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமணலில் அணை கட்டி மேட்டூர் அணை மூலமாக பாசனத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பி ஆர்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பேரழிவு பெருமழையாக பெய்து வருகிறது. உபரி நீர் கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் திறந்து விட்டது. உரிய காலத்தில் தண்ணீரை திறக்காததால் சென்ற ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள், இந்த ஆண்டு குறுவையை முற்றிலும் இழந்து விட்டனர். தற்போது சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என்கிற அச்சத்தில் இருந்த விவசாயிகளுக்குமேட்டூர் அணை நிரம்பியதால் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர். 

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன் - காரணம் என்ன..?

மனமடைந்துள்ள விவசாயிகள்

மேட்டூர் அணையின் உபரி நீர் கொள்ளிடம் வழியாக சென்று கடலில் வீணாக கலக்கப்பதை கண்டு விவசாயிகள் மனமடைந்துள்ளனர். கொள்ளிடம்  காவிரி ஆற்று இருபுறமும் இருக்கிற நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடல் நீர் உட்புகுந்து குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். ஒரு பக்கம் காவிரி டெல்டாவிற்கு இதுவரையிலும் பாசன நீர் சென்றடையவில்லை. கிடைக்கும் தண்ணீரை கொண்டு செல்வதற்கு உரிய கட்டுமான பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு காலத்திலேயே நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு மறுப்பதால் பல இடங்களில் அவசர கால பணிகளைக்  மேற்கொள்ள முடியாமல் காலங்கடந்து துவங்கி உள்ளனர். அதன் விளைவு பாசன நீரை விளை நிலப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் பறி தவிக்கின்றனர். 

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன் - காரணம் என்ன..?

மேகதாட்டு அணை கட்டுவதற்கு சாத்தியமில்லை

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறுகையில், கர்நாடகா அரசு நாலு இடங்களில் அணை கட்டுவதற்கு தீர்மானித்தது. 50 ஆண்டுகளுக்கு மேலாக விவாதத்தில் இருந்து வந்த நிலையில் 3 அணைகள் மேகதாட்டு அணை உட்பட கட்டுவதற்கு சாத்தியமில்லை. மேகதாட்டு அணை கட்டினால் ஒட்டுமொத்தமாக விலங்கினங்கள் அழியும். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அப்புறப்படுத்த வேண்டும். 15,000 ஏக்கருக்கு மேற்பட்ட வனம் அளிக்கப்படும். எனவே மத்திய அரசு அனுமதி மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு ராசிமனல் அணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை துவங்கினால் பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆகையால் ராசிமணல் அணைக்கட்டம் பணியை  தமிழ்நாடு அரசு உடனடியாக துவங்க வேண்டும், மறுத்ததால் ஒட்டுமொத்த காவிரி டெல்டாவில் போராத்தை தீவிர படுத்துவேன் என எச்சரிக்கை விடுப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன் - காரணம் என்ன..?

வீணாக கடலில் கலக்கும் 2.50 லட்சம் டி.எம்‌.சி தண்ணீர்

மேலும், தற்போது மேட்டூர் அணை நிரம்பி கடலுக்கு வீணாக 2.50 லட்சம் டி.எம்‌.சி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ராசிமணலில் அணையை கட்டி மேட்டூர் அணை மூலம் பாசத்திற்கு பயன்படுத்தினால் கடலுக்கு செல்லக்கூடிய தண்ணீரில் 64 டிஎம்சியை தேக்கி வைத்து தமிழ்நாடு பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். எனவே உடனடியாக ராசிமணல் அணைக்கட்டுமான பணியை துவங்க வேண்டும். மேகதாட்டு அணை கட்டுமான பணிக்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திட வேண்டும். கொள்ளிடம் இரு கரைகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஐந்து கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் கதவணைகள் அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன் - காரணம் என்ன..?

வீராணம் ஏரி மூலம் சென்னைக்கு  40 சதவீதம் குடிநீரை வழங்கி வருகிறோம். ஏரியின் கொள்ளளவில் 75 சதவீதம் சேமிக்கும் தன்மையை ஏரி இழந்துவிட்டது. காவிரி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை உடனடியாக தூர்வாரி அகலப்படுத்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ளம் என்றார்.  போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், மயிலாடுதுறை வடக்கு மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன், தலைவர் சீர்காழி கணேசன், தெற்கு மாவட்ட செயலாளர் பண்டரிநாதன், தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Tamilnadu RoundUp: காலமானார் டெல்லி கணேஷ்! காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: காலமானார் டெல்லி கணேஷ்! காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - தமிழ்நாட்டில் இதுவரை
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
தஞ்சாவூர்: ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4  பேருக்கு
தஞ்சாவூர்: ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு "குண்டாஸ்"
22 ஆண்டுகளில் முதன்முறை! பெடரர், நடால், ஜோகோவிச் இல்லாமல் தொடங்கும் ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று!
22 ஆண்டுகளில் முதன்முறை! பெடரர், நடால், ஜோகோவிச் இல்லாமல் தொடங்கும் ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று!
Embed widget