கரும்பலகையின் நிறத்தை மாற்றித் தர வேண்டும் - விஜய் கட்சியினரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி...!
மயிலாடுதுறை அருகே பள்ளியில் காலம் காலமாய் இருக்கும் கரும்பலகையை, பச்சை நிறத்தில் மாற்றி தாருங்கள் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே பள்ளியில் காலம் காலமாய் இருக்கும் கரும்பலகையை, பச்சை நிறத்தில் மாற்றி தாருங்கள் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) என்றும் பெயரையும் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அதனை அவரது ரசிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம் அடைந்து தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்சி அறிவிப்பிற்கு முன்னதாகவே விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். தற்போது இந்த அறிவிப்பை அடுத்து அந்த நலத்திட்ட உதவிகள் மேலும் விரிவடைய தொடங்கியுள்ளது.
நீங்க 40 இடத்துக்கு மேல ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறேன்" மீண்டும் காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி!
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் கீழஆத்துக்குடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் 100 பேருக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக வெற்றி கழகத்தினர் இன்று தொடங்கினர். இதில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் குட்டிகோபி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 100 பேருக்கு இனிப்பு, சுண்டல், முட்டை மற்றும் பால் ஆகிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முடிவில், விஜய் கட்சியில் சொன்னால் நம்ம கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் மாணவி ஒருவர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் பள்ளியில் உள்ள கரும்பலகையை பார்வைக்கு "பளிச்" என தெரியும் வகையில் பச்சை நிறத்தில் மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே கழிப்பறை உள்ளதால் ஏற்படும் சங்கடத்தை போக்க இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்றார். அதனை கேட்டுக் கொண்ட கட்சியின் மாவட்ட தலைவர் குட்டி கோபி இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கையை நிச்சயம் மேற்கொள்வதாக மாணவியிடம் உறுதியளித்தார்.