மேலும் அறிய

Power Shutdown: தீபத் திருநாளில் மின் நிறுத்தமா? மயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பால் பொதுமக்கள் பேரதிர்ச்சி...

மயிலாடுதுறை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருநாளில் பராமரிப்புப் பணி காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (24.11.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. தீப ஒளி திருநாளான கார்த்திகை பண்டிகையை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடும் வேளையில் இந்த மின் நிறுத்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் பொறியாளர் ஜி.ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறை பேச்சாவடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் நாளைய தினம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது என கூறப்பட்டுள்ளது. 

மின் நிறுத்தம் நடைபெறும் இடங்கள் 

மூவலூர், வாட்டர் ஒர்க்ஸ், டவுன் 1, 2 மற்றும் 3, வழுவூர் வடகரை, ஏ.என்.புரம், கிளியனூர், மங்கநல்லூர் மற்றும் கூறைநாடு ஆகிய மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது. குறிப்பாக பெசன்ட் நகர், மேலவீதி, மேலமடவிளாகம், அய்யாரப்பர் கீழவீதி, அய்யாரப்பர் தெற்குவீதி, திருவாரூர் சாலை, சுப்ரமணியபுரம், ஆராயத் தெரு, காமராஜர் காலணி, ஸ்ரீ நகர் காலணி, 1 முதல் 5 புதுத் தெரு, தைக்கால் தெரு, டபிர் தெரு, தெற்குவீதி, அரண்மனை நகர், திருவள்ளுவர் நகர், பூக்கடைத் தெரு, அண்ணா வீதி, மேல ஒத்தசரகு, ஜங்சன், கஸ்தூரி பாய் தெரு, தெற்கு சாலியத் தெரு, பெரிய சாலியத் தெரு, வடக்கு சாலியத் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் அய்யாரப்பர் கோயில் தெரு, திருவள்ளுவபுரம், அய்யனார் கோயில் தெரு, ஹாஜியார் நகர், பட்டமங்கலத் தெரு, பியர்லஸ் தியேட்டர் பகுதி, சின்னக் கண்ணாரத் தெரு, கச்சேரி சாலை, கலைஞர் காலணி, காமராஜர் சாலை, நீதிமன்ற வளாகம், ரேவதி நகர், புனுகீஸ்வரர் கோயில் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கூறைநாடு, பாசிக்கடைத் தெரு, அறுபத்து மூவர் பேட்டை, மேம்பாலம் மற்றும் மயிலாடுதுறை நகர் பகுதிகள் இந்த மின் தடையால் பாதிக்கப்பட உள்ளன.

இவற்றுடன் பட்டமங்கலத் தெரு, மூவலூர், சித்தர்காடு, அரையபுரம், மறையூர், கூறைநாடு, மகாதானத் தெரு, பெரிய கடைத் தெரு, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர், அரங்ககுடி, செறுதியூர், குளிச்சார், மங்கநல்லூர், திருவாரூர் ரோடு மற்றும் சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளும் மின் தடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

விளக்கேற்றும் பண்டிகை நாளில் ஏற்படும்  சிரமங்கள்

கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளிலும் கோயில்களிலும் விளக்கேற்றி வழிபடுவதும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதும் தமிழ்நாட்டில் முக்கியமான மரபாக உள்ளது. மாலை நேரத்தில் விளக்கேற்றும் நிகழ்வுகள் மற்றும் பண்டிகை ஆயத்தப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும் சூழலில், பகல் நேரத்தில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவது அன்றாட வீட்டு வேலைகளைப் பெரிதும் பாதிக்கும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடிநீர் விநியோகம், மின் மோட்டார்கள் இயக்கம், கைத்தொலைபேசி சார்ஜ் செய்தல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் இது இடையூறாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வியாபாரிகள் கவலை மற்றும் மாற்று தேதி கோரிக்கை

அதேபோல், கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு பூக்கள், அகல் விளக்குகள், எண்ணெய், பூஜைப் பொருட்கள், இனிப்புகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்ற கவலை எழுந்துள்ளது. பண்டிகை காலங்களில் கடைகளில் கூட்டமும் வியாபாரமும் களைகட்டும் நிலையில், மின்சாரம் இன்றி வியாபாரத்தைத் தொடர்வதில் சிரமங்கள் ஏற்படும் என வணிகர்கள் கருதுகின்றனர்.

மேலும், அவ்வப்போது ஏற்படும் நிர்வாகக் காரணங்களைப் பொறுத்து மின் நிறுத்தத் தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்றும் மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பண்டிகை தினமான நாளை மின் தடையை ரத்து செய்துவிட்டு, வேறு நாளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
5-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நவ.27 நேரடி வேலைவாய்ப்பு முகாம்!
5-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நவ.27 நேரடி வேலைவாய்ப்பு முகாம்!
50 வயது வரை விண்ணப்பிக்கலாம்: மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 56 செவிலியர் வேலை!
50 வயது வரை விண்ணப்பிக்கலாம்: மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 56 செவிலியர் வேலை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
TN Weather News: சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Karthigai Deepam: திருவண்ணாமலையில் தற்காலிகமாக 10 பேருந்து நிலையங்கள்! எந்தெந்த ஊருக்கு எந்தெந்த இடத்தில் பஸ்?
Karthigai Deepam: திருவண்ணாமலையில் தற்காலிகமாக 10 பேருந்து நிலையங்கள்! எந்தெந்த ஊருக்கு எந்தெந்த இடத்தில் பஸ்?
Chennai Metro Train: நாளை முதல்.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் - எந்த வழித்தடத்தில், எப்படி? முழு விவரம்
நாளை முதல்.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் - எந்த வழித்தடத்தில், எப்படி? முழு விவரம்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
Embed widget