மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (21.01.2025): மயிலாடுதுறையில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 21.01.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

சீர்காழி மின் கோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 21.01.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீர்காழி வடக்கு உதவி செயற் பொறியாளர் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

எதிர்வரும் 21-01-2025 செவ்வாய்கிழமை அன்று வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் ஆச்சாள்புரம் துணைமின் நிலையங்களில் உள்ள சீர்காழி நகர்-1 பீடர் மற்றும் பழையார் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணையின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

மின்நிறுத்த பகுதிகள் 

தென்பாதி, சீர்காழி புதிய பழைய பேருந்து நிலையங்கள், சட்டநாதர் கோவில், ஈசானிய தெரு, கீழ தென்பாதி, மருத்துவமனை ரோடு, பழையார், புதுப்பட்டினம் சுனாமி நகர், தர்காஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையம்

வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV ஆத்துகுடி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 KV ஆத்துகுடி உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான ஆத்துகுடி தருமதானபுரம், கதிராமங்கலம் கொண்டத்தூர், திருநன்றியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மின்சாரம் இருக்காது என சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.

எடமணல் துணை மின்நிலையம் 

எடமணல் துணை நிலையம் தொடுவாய் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், தொடுவாய் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான வேட்டங்குடி, தொடுவாய், எடமணல், கூழையார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மின் கோட்டம் 

மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 21.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் உள்ள மங்கநல்லுர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மங்கநல்லூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளான மங்கநல்லூர், இலந்தங்குடி, ஆனந்தநல்லூர், கந்தமங்களம், மேலமங்கநல்லூர், பெரம்பூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மயிலாடுதுறை மின் கோட்ட நகர்புற உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் நாளையதினம் 21.01.2025 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான காவேரி நகர், கூறை நாடு, அக்களூர், அறுபத்துமூவர்பேட்டை, தூக்கனம்குளம், தானியூர், ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்

மணக்குடி துணை மின்நிலையம்

மணக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும், சோழசக்கரநல்லூர், நத்தம், ஆலவெளி, செம்மங்கலம், ஓலையாம்புத்தூர், மணக்குடி, கீழ்இருப்பு, கஞ்சா நகரம், மேலையூர், பொன்னுகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

நீடூர் துணை மின்நிலையம் 

நீடூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நீடூர், கீழமருதநல்லூர், ஆனந்த தாண்டவபுரம், கொற்றவநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுள்ளது. 

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவிகளுக்குக் அந்த விதிமுறை பொருந்தாது..! பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர யாருக்கு என்ன தகுதி தேவை?
மாணவிகளுக்குக் அந்த விதிமுறை பொருந்தாது..! பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர யாருக்கு என்ன தகுதி தேவை?
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவில் யார் யாருக்கு இடம்? ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட லிஸ்ட்!
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவில் யார் யாருக்கு இடம்? ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட லிஸ்ட்!
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget