Mayiladuthurai Power Shutdown (03.10.2026) : காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்! உஷார் மக்களே..!
Mayiladuthurai Power Shutdown 03.09.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பேச்சாவடியில் அமைந்துள்ள 110/33-11 கிவோ தொகுப்பு துணைமின் நிலையத்தில் நாளை அக்டோபர் 3-ஆம் தேதி (03.10.2026) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மூவலூர், வாட்டர் ஒர்க்ஸ், டவுன் I, II, III, வழுவூர் வடகரை, A.N.புரம், கிளியனூர், மங்கநல்லூர் மற்றும் கூறைநாடு ஆகிய மின்பாதைகளில் மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளது.
இந்த மின் நிறுத்தத்தின் போது மயிலாடுதுறை நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளான பெசன்ட் நகர், மேலவீதி, மேலமடவிளாகம், அய்யாரப்பர் கீழவீதி, அய்யாரப்பர் தெற்குவீதி, திருவாரூர் சாலை, சுப்ரமணியபுரம், ஆராயதெரு, காமராஜர் காலனி, ஸ்ரீ நகர் காலனி, 1 முதல் 5 வரையிலான புது தெருக்கள், தைக்கால் தெரு, டபிர் தெரு, தெற்குவீதி, அரண்மனை நகர், திருவள்ளுவர் நகர், பூக்கடை தெரு, அண்ணா வீதி, மேலஒத்தசரகு மற்றும் ஜங்ஷன் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
மேலும் கஸ்தூரி பாய் தெரு, தெற்கு சாலிய தெரு, பெரிய சாலிய தெரு, வடக்கு சாலிய தெரு, அய்யாரப்பர் கோவில் தெரு, திருவள்ளுவபுரம், அய்யனார் கோயில் தெரு, ஹாஜியார் நகர், பட்டமங்கல தெரு, பியர்லஸ் தியேட்டர் பகுதி, சின்ன கண்ணார தெரு, கச்சேரி சாலை, கலைஞர் காலனி, காமராஜர் சாலை, நீதிமன்ற வளாகம், ரேவதி நகர், புனுகீஸ்வரர் கோயில் கீழ்வீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கூறைநாடு, பாசிகடை தெரு, அறுபத்து மூவர்பேட்டை, மேம்பாலம் மற்றும் மயிலாடுதுறை நகரின் ஒட்டுமொத்த பிரதான பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
இவற்றுடன் கிராமப்புற பகுதிகளான சித்தர்காடு, அரையபுரம், மறையூர், கூறைநாடு, மகாதான தெரு, பெரிய கடைத் தெரு, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர், அரங்ககுடி, செறுதியூர், குளிச்சார், மங்கநல்லூர், திருவாரூர் ரோடு மற்றும் சீனிவாசபுரம் ஆகிய இடங்களுக்கும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் வழங்கப்பட மாட்டாது என மயிலாடுதுறை பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சீர்காழி திருவெண்காடு துணைமின் நிலைய பராமரிப்பு
இதேபோன்று சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட திருவெண்காடு 110/11 KV துணைமின் நிலையத்தில் அமைந்துள்ள 11 KV நாங்கூர் உயரழுத்த மின்பாதையில் நாளை அக்டோபர் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக 11 KV நாங்கூர் மின்பாதையில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் நாங்கூர், மேலச்சாலை, திருவாலி, கீழச்சாலை, புதுத்துறை, நிம்பேலி, நாராயணபுரம் ஆகிய ஊர்களுக்கும், அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் தடைப்படும் என சீர்காழி தெற்கு பிரிவு இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்
பராமரிப்பு பணிகளின் போது எதிர்பாராத மின்கட்டமைப்பு மாற்றங்கள் அல்லது நிர்வாக காரணங்கள் எழுந்தால் மின் நிறுத்தம் செய்யப்படும் தேதியில் கடைசி நேர மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அன்றாட மின் தேவைகளை முன்னதாகவே திட்டமிட்டு பூர்த்தி செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டவுடன் மாலை 5.00 மணிக்கு மேல் வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























