மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (18.11.2025) : இங்கெல்லாம் இன்று மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 18.11.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (18.11.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் துணை மின் நிலையங்கள் 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின்கோட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்றைய தினம் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  உதவிசெயற்பொறியாளர் அருள்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

மயிலாடுதுறை துணை மின்நிலையம் 

மூவலூர் மின்பாதை

* ஆர்கேபுரம்

* சித்தர்காடு

* மறையூர்

* அசிகாடு

* முருகன்தோட்டம்

* செங்குடி

குத்தாலம் துணை மின்நிலையம் 

* மாதிரிமங்கலம்

கடலங்குடி துணை மின் நிலையம் 

* முருகமங்கலம்

* மாங்குடி

* வானாதிராஜபுரம் 

மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காகக் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின்சாரம் சார்ந்த தங்களது அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்தல், பேட்டரிகளை முழுமையாக மின்னூட்டம் செய்தல் போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து, மின் நிறுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட மயிலாடுதுறை மின்கோட்ட மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன், முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
12th Result 2026: தள்ளாடும் அரசுப் பள்ளிகள் - தனியார் பள்ளிகளில் உயர்ந்த தேர்ச்சி சதவீதம்..அதிர்ச்சியில் கல்வியாளர்கள்..!
12th Result 2026: தள்ளாடும் அரசுப் பள்ளிகள் - தனியார் பள்ளிகளில் உயர்ந்த தேர்ச்சி சதவீதம்..அதிர்ச்சியில் கல்வியாளர்கள்..!
TN 12th Result 2026: பிளஸ்-2 தேர்வில் மயிலாடுதுறை கலக்கல்! 93.51% பேர் வெற்றி - மாணவிகளே முதலிடம்!
TN 12th Result 2026: பிளஸ்-2 தேர்வில் மயிலாடுதுறை கலக்கல்! 93.51% பேர் வெற்றி - மாணவிகளே முதலிடம்!
பெற்றோர் கவனத்திற்கு..! இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளது... எதற்கு தெரியுமா‌..?
பெற்றோர் கவனத்திற்கு..! இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளது... எதற்கு தெரியுமா‌..?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாட்ஸப்பில் அனுப்பி ஆதரவு கேட்பதா? தவறாக வழிநடத்தப்படும் விஜய்- வெடித்த விசிக!
வாட்ஸப்பில் அனுப்பி ஆதரவு கேட்பதா? தவறாக வழிநடத்தப்படும் விஜய்- வெடித்த விசிக!
Kanimozhi: “தவெக-வை ஆட்சி அமைக்க விடுங்கள்“; திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பரபரப்பு பேட்டி
“தவெக-வை ஆட்சி அமைக்க விடுங்கள்“; திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பரபரப்பு பேட்டி
DMK AIADMK Alliance: ’’நாங்க மெயின் எதிரிகள்; திமுக- அதிமுக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை’’ டிகேஎஸ் இளங்கோவன் உச்சகட்ட ட்விஸ்ட்!
DMK AIADMK Alliance: ’’நாங்க மெயின் எதிரிகள்; திமுக- அதிமுக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை’’ டிகேஎஸ் இளங்கோவன் உச்சகட்ட ட்விஸ்ட்!
AIADMK: அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்.! இபிஎஸ் முதலமைச்சர் ஆவார்.. அடித்துச் சொல்லும் தம்பிதுரை
அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்.! இபிஎஸ் முதலமைச்சர் ஆவார்.. அடித்துச் சொல்லும் தம்பிதுரை
TN 12th Result District Wise: பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய ஈரோடு மாவட்டம்; இத்தனை சதவீதம் தேர்ச்சியா.?
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய ஈரோடு மாவட்டம்; இத்தனை சதவீதம் தேர்ச்சியா.?
RCJ iPlanet EV Scooter: ரெட்ரோ ஸ்டைல்; ரூ.70,000 விலை; 60 கிமீ ரேஞ்ச்; ரிஜிஸ்ட்ரேஷன், லைசென்ஸ் தேவையில்லை; இப்படி ஒரு EV ஸ்கூட்டர்
ரெட்ரோ ஸ்டைல்; ரூ.70,000 விலை; 60 கிமீ ரேஞ்ச்; ரிஜிஸ்ட்ரேஷன், லைசென்ஸ் தேவையில்லை; இப்படி ஒரு EV ஸ்கூட்டர்
TN 12th Result Centums: கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?
கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?
GOLD SILVER RATE: அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Embed widget