மேலும் அறிய

சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...

சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன் என சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள், வலிமை மிக்க பெண்களை விளம்பரப் பொருட்களாகவோ, காட்சிப் பொருட்களாகவோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியல் ஆக்குவதைத் தகர்க்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.

பாரதி ஒரு காலக்கண்ணாடி

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பெருங்கவி பாரதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிறுவனத் தலைவர் தமிழ்ச்செம்மல் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர் பி. காளியம்மாள், “பாரதி ஒரு காலக்கண்ணாடி” என்ற தலைப்பில் விழாப்பேருரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், "பெண்மையும், தமிழும் வேறு வேறு அல்ல. இரண்டும் அழகு, அன்பு, செழுமை நிறைந்தவை. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இவைகளை வேறு வேறாகப் பார்க்காதீர்கள் என்பதே அனைவரின் கனவு. உங்களில் இருந்து வந்தவர்கள்தான் பெண்கள், உங்களுக்காக இருப்பவர்கள் என்று நாம் உணர்ந்துகொண்டாலே அவர்களுக்குச் சம உரிமை கொடுத்ததாக அர்த்தம்" என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள் கூறுகையில்:

பெண்கள் போகப் பொருளாகக் கூடாது

விழா நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள், பெண்களின் நிலை குறித்தும் அரசியல் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

பெண்களைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பு

"ஆகப்பெரும் ஆற்றல் படைத்த பெண்களை ஒருசில விளம்பரங்களுக்கு ஒரு காரணப் பொருளாக முன்னிலைப்படுத்தி மாற்றிப் பயன்படுத்துவது ஏற்கவே முடியாத ஒன்று. பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பது, கதைக்குத் தொடர்பில்லாத வகையில் சினிமாக்களில், மதுபானக் கூட்டங்களில் நடனம் ஆட வைப்பது போன்ற இடங்களில் மட்டும் பெண்களைப் பார்க்காதீர்கள். அப்படி ஒரு பார்வையில் பெண்கள் இல்லை. பெண்கள் மிகப்பெரிய திறன் கொண்ட வலிமை மிக்கவர்கள். அவர்களை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்."

பெண் சுதந்திரம்

"பெண் சுதந்திரம் என்று பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நம் வீட்டில் நாம் எப்படிப் பெண்களை நடத்துகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுகிறார்கள், தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க அரசியலை மேம்படுத்திக் கொள்ள வருகிறார்கள். ஆனாலும், 'ஒரு பெண் இவ்வளவுதான் செய்ய வேண்டும்' என்ற கட்டுப்பாடாக இருக்கட்டும், இதைத் தாண்டி யோசிக்கக் கூடாது என்ற நிலைப்பாடாக இருக்கட்டும் – இது வீட்டிலிருந்து தொடங்கி நாடு வரை அப்படித்தான் உள்ளது என்ற வலியோடுதான் எங்கள் வார்த்தைகள் வருகிறது."

அரசியல் நிலைப்பாடு

சீமானின் கருத்து: "மொழி அழிந்தால் இனம் அழியும் என்று சீமான் சொல்லியுள்ள கருத்து ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. எனக்கு மொழி சார்ந்த புரிதலை ஏற்படுத்தியவர் சீமான். சரியான கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்."

சட்டமன்றத் தேர்தல்: "என்னுடைய அரசியல் பயணம் மக்களுடன் சேர்ந்தே இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். மக்களின் பிரதிநிதியாக நிற்பேன். கட்சி ஆரம்பிப்பது, ஒரு கட்சியில் இணைவது குறித்த முடிவை ஒருநாள் சொல்வேன்."

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது

"நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி ஓராண்டு ஆகியுள்ளது. அதற்கான விடை அவரே சொல்லி இருப்பதாக நான் நம்புகிறேன்.

"திருப்பரங்குன்றம் விவகாரம்:

அரசியல் ஆக்குவதைத் தகர்க்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்துப் பேசிய காளியம்மாள், அதை அரசியல் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

"திருப்பரங்குன்றம் பிரச்சனை வரலாற்று நகர்வுடன் சேர்ந்து கேள்வியும் வருகிறது. 'கந்தனுக்கான மலையா, சிக்கந்தர் மலையா?' என்ற கேள்விக்கு வரலாற்றுத் தேடுதல் இல்லாமல் சொல்ல முடியாது. ஆனால் தற்போதைய சூழலில், மதம் சார்ந்து, ஜாதி சார்ந்து எந்தப் பிரச்சனையும் வராமல் அங்கு வாழும் மக்கள் இணக்கமாக வாழ்கிறோம் என்று சொல்லும்போது, அந்த இடத்தில் பிரச்சனையை உண்டாக்குவதும், அதைச் சார்ந்து நீதிமன்றத்திற்குச் செல்வதும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சொல்வதும், இணக்கமாக இருக்கும் மக்களிடம் ஒரு பிரிவை ஏற்படுத்துகின்ற குதர்க்கமான சூழ்நிலையாக மாற வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்."

"அப்பகுதியில் வாழும் மக்கள், 'எங்களுக்குச் சிக்கல்' என்று சொன்னால் அதற்குத் துணை நில்லுங்கள். 'எனக்குப் பிரச்சனை இல்லை' என்று மக்கள் சொல்லும்போது, அங்கு ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். எல்லா கடவுளும் அன்பைத்தான் போதித்துள்ளபோது, ஏன் இந்தப் பிரிவினை? இதைக் கடவுள் சொன்னதை மறந்து அங்கு பெரிய பிரச்சனை நடப்பதை மக்கள் தான் கவனிக்க வேண்டும். இதை வைத்து அரசியல் ஆக்குவதை முற்றிலுமாகத் தகர்க்க வேண்டும்" என்று காளியம்மாள் திட்டவட்டமாகக் கூறினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?
அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் - நடந்தது என்ன?
​
​"பக்கத்துல இருக்கவங்கள பாருங்க" வாஷிங் மெஷின்னு சொன்ன கனிமொழிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Embed widget