மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டம் இன்று ஜூலை 4-ல் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் தடவாளப் பொருட்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் மற்றும் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஆகிய முக்கிய துணை மின் நிலையங்களில் இன்று 04.07.2026 (சனிக்கிழமை) அன்று அவசர கால மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கியப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் அது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு;

1. மணக்குடி துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்

மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பொறிஞர் M. விஜயபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 33/11 கி.வோ மணக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, மணக்குடி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த 

* சேமங்கலம்

* வேப்பங்குளம்

* மணக்குடி 

* மாப்படுகை 

* ஆலவேலி

* நத்தம்

* வேப்பங்குளம்

* சாவடி

* உளுத்துக்குப்பை

* மொழையூர்

* ஆனதாண்டவபுரம்

 * கீழிருப்பு 

மேற்கண்ட முக்கியப் பகுதிகள் மட்டுமன்றி, இந்த மின்பாதைகளைச் சார்ந்துள்ள சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இதே நேரத்தில் மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மின் நிறுத்தம் என்பது அவ்வப்போது ஏற்படும் நிர்வாக ரீதியிலான காரணங்களைப் பொறுத்து தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்றும் நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2. பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்

இதேபோல், பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் N. அருள்செல்வன், வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய இரு துணை மின் நிலையங்களிலும் இன்றைய தினம் சனிக்கிழமை (04.07.2026) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒருசேர மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

* பாலையூர்

* பருத்திக்குடி

* காரனூர்

* நக்கம்பாடி

* மாந்தை

* கங்காதாரபுரம்

* தேரழந்தூர் 

* கோமல் 

* கள்ளிக்காடு

* பெரட்டக்குடி 

* கந்தமங்கலம்

* வடமட்டம்

* காஞ்சிவாய்

* கோனேரிராஜபுரம்

* மேக்கிரிமங்கலம்

* பழையகூடலூர்

* கொக்கூர்

* திருவாலங்காடு 

* திருவாவடுதுறை 

* பேராவூர்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் இந்தத் துணை மின் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்களுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கும் இந்த 8 மணி நேர மின் நிறுத்த அறிவிப்பு பொருந்தும் என மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேமாத்தூர் துணைமின் நிலையப் பகுதிகளில் இன்று (ஜூலை 4) மின்நிறுத்தம்!

சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மேமாத்தூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று 04.07.2026 (சனிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் நேரம்:

காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

பாதிக்கப்படும் பகுதிகள்

மேமாத்தூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பின்வரும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

* கீழ்மாத்தூர்

* வாழ்க்கை

* வல்லம்

* பழையதிருச்சம்பள்ளி

* பெரியமடப்புரம்

* முக்குரும்பூர்

* மாத்தூர்

* மேமாத்தூர்

* சாத்துனூர்

* கீழபரசலூர்

* மேலபரசலூர்

* பரசலூர்

* ஆறுபாதி 

* விளநகர் 

* மேலகட்டளை

* கடலி

* ஒட்டங்காடு

* நெடுவாசல்

* பெருங்குடி

* கூடலூர் 

* ராதாநல்லூர்

இந்த மின் நிறுத்தம் மின்கட்டமைப்பு மற்றும் இதர அவசர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என செம்பனார்கோயில் இயக்குதலும் & பராமரித்தலும் பிரிவின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர். C.சரவணன் தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வோர்களுக்கான ஆலோசனைகள்

மயிலாடுதுறை கோட்ட மின் வாரிய அதிகாரிகள் தங்களது செய்திக்குறிப்பில், மின் நிறுத்தக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை, குறிப்பாகக் குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுத் தடையின்றி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

துணை மின் நிலையங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மிக விரைவாகச் செய்து முடிக்கப்படும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!
மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
யார் அந்த 8 பேர்? நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு!
யார் அந்த 8 பேர்? நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Embed widget